News
Loading...

டிஜிட்டல் மயமாகிறது டெல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள்!

டிஜிட்டல் மயமாகிறது டெல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள்!

லைநகர் டெல்லியில் வரும் ஜனவரி முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ரொக்கப் பணமற்ற டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்காக அங்குள்ள 14 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் பாயின்ட் ஆப் சேல் எந்திரங்கள் எனப்படும் ஸ்வைப்பிங் எந்திரங்களை நிறுவும் பணி தொடங்கி உள்ளது. இதன் மூலம் ரொக்கப் பணத்தை பயன்படுத்தாமல், ஓட்டுனர் உரிமம், அனுமதி சான்றிதழ், தகுதி சான்றிதழ் ஆகியவற்றுக்கான கட்டணங்களை டெபிட், கிரெடிட் கார்டுகளைக் கொண்டு செலுத்தலாம். 

இதற்காக அலுவலக பயன்பாட்டிற்கான கம்ப்யூட்டர் சாப்ட்வேரும் மேம்படுத்தப்படுகிறது. இதே போன்று மற்ற அரசு துறைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை கொண்டு வர டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்