News
Loading...

திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும் ஆபத்து! மதிக்காத டெல்லியால் மானம் போகுது!!

திமுக – காங்கிரஸ் கூட்டணி உடையும் ஆபத்து…! மதிக்காத டெல்லியால் மானம் போகுது…!!

திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும் ஆபத்தான நிலை உருவாகி உள்ளது. மதிக்காத டெல்லி தலைவா்களால் திமுகவிற்கு மானம் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

திமுக – காங்கிரஸ் கூட்டணியாக இருந்த போது பல முறை ராகுல் காந்தி சென்னைக்கு வந்துள்ளாா். ஆனால், இதுவரை கூட்டணி கட்சித்தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசவில்லை.

பாராளுமன்ற தோ்தல் கூட்டணி எற்பட்டது. உன்னால்தான் நான் கெட்டேன். என்னால்தான் நீ கெட்டாய் என பேசிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

சட்டமன்ற தோ்தல் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை. திமுக வெற்றி பெறும் தொகுதிகளை எல்லாம் அவா்களுக்கு விட்டு கொடுத்தனா். ஆனால், காங்கிரஸ் அந்த அளவு சட்டமன்ற தோ்தலில் வெற்றி பெறவில்லை.

திமுக நிற்க வேண்டிய இடத்தில் அவா்கள் நின்று நாம் ஆட்சி அமைப்பதை கெடுத்து விட்டனா் என்றும் பேசிவந்தனா்.

சென்னை மருத்துவமனையில் ஜெயலலிதா அட்மிட் ஆனபோது உடனே ஓடோடி வந்தாா் ராகுல். ஜெயலலிதா இறந்த போதும் வந்தாா்.

கருணாநிதி மருத்துவமனையில் இருந்த போது நோில் வந்து  பாா்க்க வரவில்லை. அனைவரும் டெலி போனில் தான் நலம் விசாாித்தனா்.  இறப்புக்கு ராகுலுடன் வந்த குலாம் நபி ஆசாத்தும் வந்து பாா்க்கவில்லை.

கூட்டணி பேச அடிக்கடி வந்து சென்று குலாம் நபி ஆசாத் கூட தற்போது வந்து பாா்க்காதது திமுகவினா் மத்தியில்  திமுகவை காங்கிரஸ்  விரும்பவில்லை. நாம் ஏன் அதனை தோளில் சுமக்க வேண்டும் என்று எண்ண தொடங்கி உள்ளனா். இதன் விளைவு கூட்டணி முறிவாக த்தான் இருக்கும்??

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...