News
Loading...

கருணாநிதி தலைமையில் ஜன., 4-ல் திமுக பொதுக்குழு கூடுகிறது

கருணாநிதி தலைமையில் ஜன., 4-ல் திமுக பொதுக்குழு கூடுகிறது

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜனவரி 4-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக பொதுக்குழு கூட்டம் டிசம்பர் மாதம் 20-ம் தேதி நடைபெற இருப்பதாக இருந்தது. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதானல் பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்தாண்டில் நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பொதுக்குழு கூட்டம் ஜனவரி 4-ம் தேதி காலை 9-மணிக்கு கூட இருப்பதாகவும், இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை ​ வகிப்பார் என்று திமுகவின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள், தணிக்கைக் குழு அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்