News
Loading...

ஆட்சி அமைக்க ரகசிய திட்டமா.? திமுக பொதுக்குழு தேதி அறிவிப்பு..!

ஆட்சி அமைக்க ரகசிய திட்டமா.? திமுக பொதுக்குழு தேதி அறிவிப்பு..!

மிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் 20ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் வருகின்ற 20ம் தேதி பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் எனவே பொதுக்குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இந்த முடிவால் தமிழக அரசியலில்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சியினரை சேர்த்து மொத்தம் 98 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்