News
Loading...

போயஸ் கார்டனுக்கு திமுக பாதுகாப்பு! உள்ளே எறும்பு நுழைந்தாலும் ஸ்டாலினுக்கு தெரிந்துவிடும்!

போயஸ் கார்டனுக்கு திமுக பாதுகாப்பு! உள்ளே எறும்பு நுழைந்தாலும் ஸ்டாலினுக்கு தெரிந்துவிடும்!

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா எல்லா அரசுத்துறைகளை விட  அதிகம் பாசம் வைத்திருந்தது காவல்துறையின் மேல் தான்.

அதே போன்று தான் காவல்துறையும். ஜெயலலிதா மேல் காவல்துறையில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு தனி பிரியம் உண்டு.

இந்நிலையில் ஜெயலலிதா மறைந்த பிறகும்  போயஸ் கார்டனுக்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்தனர்.

இதுகுறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார். இதனை தொடர்ந்து போலீசாரின் எண்ணிக்கை வெகுவாக குறைப்பட்டதாக தெரிகிறது.

அதே நேரம் தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி ஒன்று போயஸ் கார்டனை பாதுகாக்க போடப்பட்டுள்ளது. இங்கு தான் விசயம் உள்ளது.

இந்த ஏஜென்சி திமுக முன்னாள் கவுன்சிலர் தனசேகரன் என்பவருக்கு சொந்தமானதாம்.

இவர் விருகம்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில்  போட்டியிட்டவர் ஆவார். இதன்மூலம் போயஸ் கார்டனில் நடக்கும் ஒவ்வொரு அசைவும்  ஸ்டாலினுக்கு தெரிந்து விடும் என கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...