News
Loading...

சசிகலா பற்றி விமர்சிக்க வேண்டாம்! தொண்டர்களுக்கு திமுக உத்தரவு! சூப்பர் பிளான் ரெடி!

சசிகலா பற்றி விமர்சிக்க வேண்டாம்! தொண்டர்களுக்கு திமுக உத்தரவு! சூப்பர் பிளான் ரெடி!

ருணாநிதி என்ற ஒருவர் இருக்கும் வரையில் தான், தானும் ஒரு தலைவராக இருக்க முடியும் என நம்பினார் ஜெயலலிதா.

இதே போன்று தான் கருணாநிதியும் நினைத்து வருகிறார். மூன்றாவது ஒருவர் தங்களுக்கு எதிராக வருவதை இருவரும் விரும்பியதில்லை.

இந்நிலையில் ஜெயலலிதா மறைந்து விட்டார். இனி கிட்டத்தட்ட எதிரிகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டதாக திமுகவினர் நினைக்கின்றனர்.

இந்த நிலையில் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ளார். அவரை விமர்சிக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு திமுக வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அப்படி விமர்சித்தால் நாளை ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டால் அதனை எதிர்த்து அதிமுகவினர் விமர்சிக்க கூடும் என திமுக தலைமை நினைக்கிறதாம்.

அதே போல் இதுவரை அதிமுகவின் ஓட்டு திமுகவிற்கு கிடைத்ததில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டன.

அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள், புதிய ஒருவருக்கு வாக்களிப்பதை விட ஸ்டாலினுக்கு வாக்களிக்கலாம் என்ற மனநிலைக்கே எதிர்காலத்தில் வர வாய்ப்புள்ளதாக திமுக தலைமை கருதுகிறதாம்.

இதனால் இந்த நேரத்தில் சசிகலாவை எதிரியாக சித்தரித்து தொண்டர்களை அவர் பக்கம் போய்விடச் செய்ய வேண்டாம் என திமுக தலைமை கருதுகிறதாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்