News
Loading...

ராம மோகன ராவ் அலுவலகத்தில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன

ராம மோகன ராவ் அலுவலகத்தில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன

சென்னை: தமிழகத் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை இன்று (புதன்கிழமை) காலை முதல் சோதனை நடத்துகிறது. ராம மோகன ராவ் அவர்களின் வீடு, அலுவலகம் உட்பட 13 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. ராம மோகன ராவ் மகனுக்குத் நெருக்கமான 5 தொழிலதிபர்கள் வீட்டிலும் இந்த சோதனை நடக்கிறது. பின்னர், வருமான வரித்துறையினர் தமிழக அரசின் தலைமைச் செயலகத்திலும் சோதனை தொடங்கப்பட்டது.

பின்னர், தமிழக அரசுடனும் ராம மோகன ராவுடனும் நெருங்கிய தொடர்பில் இருப்பவராகக் கூறப்படும் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்தறை சோதனையை ஆரம்பித்தது. இந்த சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் தமிழகக் காவல்துறையினரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

சுமார் 12 மணி நேரம் நடக்கும் இந்த சோதனை விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இச்சோதனையின் அடிப்படையில் 131 கோடி ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 170 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர் சீனிவாசலு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அலுவலகத்தில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் 40க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், அவரது உறவினர்கள் வீட்டிலிருந்து ரூ.18 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளும் 2 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, அவரது மடிக்கணிணி, பென் டிரைவ் மற்றும் மின்னஞ்சல் ஆகியவை வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்