News
Loading...

சின்னம்மா காலில் விழ தடை! திடீர் உத்தரவு!!

சின்னம்மா காலில் விழ தடை! திடீர் உத்தரவு!!

ஜெயலலிதா காலில் விழுவதை அதிமுகவினர் கவுரமாக நினைத்து வந்தனர். அந்த வாய்ப்பிற்காக ஏங்கி வந்தனர். வேறு யார் காலிலும் அதிமுகவினர் விழ மாட்டார்கள்.

இந்நிலையில் ஜெயலலிதா மறைந்த சில தினங்களில் சசிகலா காலில் சில அதிமுக அமைச்சர்கள் விழுந்து மண்டியிட்டனர். இதற்கு வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் சசிகலா காலில் விழ வேண்டாம் என அதிமுகவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தெடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு அதன் நகலை சசிகலாவிடம் அளிப்பதற்காக மாவட்ட நிர்வாகிகள் போயஸ் கார்டன் வந்த வண்ணம் உள்ளனர்.

அவர்களை அதிமுக மூத்த நிர்வாகிகள், கோகுல இந்திரா, வளர்மதி, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோர் ஒழுங்குபடுத்துகின்றனர். அப்போது அவர்கள் மாவட்ட நிர்வாகிகளிடம் சின்னம்மா காலில் விழ வேண்டாம் என அட்வைஸ் செய்கின்றனராம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...