News
Loading...

ஆதார் எண், கைவிரல் ரேகை மூலம் டிஜிட்டல் முறையில் கோவில் காணிக்கை செலுத்த வசதி

ஆதார் எண், கைவிரல் ரேகை மூலம் டிஜிட்டல் முறையில் கோவில் காணிக்கை செலுத்த வசதி

சென்னை அடுத்த தாம்பரத்தில் டிஜிட்டல் முறையில் கோவிலில் காணிக்கை செலுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மின்னணு பணப்பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வரும் நிலையில், சானடோரியம் லட்சுமி விநாயகர் ஆலயத்தில் ரொக்கமில்லாமல் உண்டியல் காணிக்கை செலுத்த பிரத்யேக ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்மூலம் ஆதார் எண், கைவிரல் ரேகை மற்றும் செலுத்த வேண்டிய காணிக்கை தொகை ஆகியவற்றை பதிவிட்டால், பக்தர்களின் வங்கி கணக்கிலிருந்து, கோவில் வங்கி கணக்கிற்கு பணம் சென்றடையும். கோவிலுக்கு வந்த பக்தர்கள் புதிய முறையில் தங்கள் காணிக்கைகளை செலுத்தினர்.

இந்த முறையின் மூலம் கோயில் நிர்வாகத்தினர் இனி  பண முறைகேடுகளில் ஈடுபட முடியாது என்றும் பக்தர்கள் தெரிவித்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...