News
Loading...

மென்பொருள் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக மோசடி- 4 பேர் கைது

சென்னை: மென்பொருள் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக மோசடி- 4 பேர் கைது

சென்னையை அடுத்த தாம்பரத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொளத்தூரில் செயல்பட்டு வரும் ஸ்மார்ட் சொல்யூசன்ஸ் என்ற வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் பணத்தை இழந்த சிலர், அந்நிறுவனத்தில் பணிபுரியும் நபரை தாம்பரத்தில் பார்த்தபோது, அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக தாம்பரம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரபல மென்பொருள் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் அந்நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, ஸ்மார்ட் சொல்யூசன்ஸ் வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த பிரபு மற்றும் கார்த்திக் உள்பட நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நகைகளையும் பறிமுதல் செய்தனர்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...