News
Loading...

கருப்புபணம் வைத்திருப்பவர்கள் பற்றி 4 ஆயிரம் இ-மெயில்கள் குவிந்தன

கருப்புபணம் வைத்திருப்பவர்கள் பற்றி 4 ஆயிரம் இ-மெயில்கள் குவிந்தன

ருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் உயர் மதிப்பு ரூபாய் நோட்டு களை செல்லாது  என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.
இதை தொடர்ந்து ரூ.2 ஆயிரம், ரூ-.500 புதிய நோட்டு கள் வெளியிடப்பட்டன.

ஆனாலும் கருப்பு பணம் பதுக்கி வைத்திருந்தவர்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய்  நோட்டுகளை கொடுத்து விட்டு புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி வருவது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.

அதோடு வருமான வரித் துறையும் நாடு முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே   கருப்பு பணம்   பதுக்கி வைத்திருப் பவர்கள்  பற்றிய விவரங் களை அறிய  வருமான வரித்துறை  இ-மெயில் ஒன்றை அறிவித்து இருந்தது. பொதுமக்கள்  இந்த இ-மெயில் மூலம் அரசுக்கு தகவல்களை தெரிவிக்கலாம் என்று தெரிவித்து இருந்தது.

கருப்பு பணம் குறித்த அரசின் இ-மெயிலான இதில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 4 ஆயிரம் இ-மெயில் கள் குவிந்துள்ளன.இதுகுறித்து நிதி அமைச் சக அதிகாரி கூறும் போது கருப்பு பணம் பற்றி பொது மக்களிடம் இருந்து 4 ஆயிரம் இ-மெயில்கள் வந்துள்ளன. இது நல்ல  வரவேற்பாகும் என்றார். வருமான  வரித்துறையினர் இந்த இ-மெயில்கள் குறித்து  ஆய்வு செய்து வருகின்றனர்.

அரசின் புலனாய்வு அமைப்புகள் மூலம் கருப்பு பணம் குறித்து பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. தற்போது பொதுமக்கள் மூலம் கிடைக்கும் தகவல் களும்   அரசுக்கு  மிகவும் பயன் உள்ளதாக  இருக்கும் என்று தெரிகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...