News
Loading...

மறைந்த முதல்வருக்கு வழங்கப்பட்ட எம்பாமிங் சிகிச்சை பற்றிய வீடியோ!!

மறைந்த முதல்வருக்கு வழங்கப்பட்ட எம்பாமிங் சிகிச்சை பற்றிய வீடியோ!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த செய்தி தமிழக மக்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியது. அவருடைய இறப்பு செய்தியை தாங்க முடியாத தமிழக மக்களுக்கு, தங்கள் தாய் மூன்று மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டார் என்று வெளியான தகவலால் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது இறுதி சடங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவரது கன்னத்தில் நன்கு புள்ளிகள் காணப்படுகிறது.

அது அவரது உடல் கெடாமலிருக்க மருத்துவர்கள் எம்பாமிங் சிகிச்சை முறையை கையாண்டதை குறிப்பிடுகிறது. அதாவது ஒருவர் இறந்துவிட்டால், அவரது உடலின் நிறம் மாறாமல் இருக்கவும், அவரது உடல் கெடாமாலிருக்கவும் இந்த சிகிச்சை முறையை மேற்கொள்வார்கள்.

இந்த சிகிச்சை முறையை மேற்கொண்டால், இறந்தவரின் உடலை சில மாதங்கள் வரை பதப்படுத்த முடியும். அப்படி இது உண்மையானால் ஜெயலலிதா எப்படி இறந்தார் ? எப்போது இறந்தார்?  அவர் இயற்கையாக இறந்தாரா அல்லது பதவி ஆசை பிடித்த சில விஷமிகளால் செயற்கையாக இறந்தாரா என்று பல கேள்விகள் எழுகின்றன.

மேலும், கடந்த 75 நாட்களாக, ஏன் அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை, ஏன் அவரது ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை என்று கேள்விகள் பல சந்தேகங்களை பொதுமக்கள், கட்சித்தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

எது உண்மை என்று இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் மருத்துவமனையில் கடந்த 75 நாட்களாக என்ன நடந்தது என்பது இறந்த அந்த ஆன்மாவிற்கே வெளிச்சம் என்று அனைத்து தரப்பினரும் மனதை தேற்றிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.



முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...