News
Loading...

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முயற்சிக்காக இந்திய வம்சாவளி சிறுமிக்கு சர்வதேச அமைதி விருது

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முயற்சிக்காக இந்திய வம்சாவளி சிறுமிக்கு சர்வதேச அமைதி விருது

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முயற்சிக்காக துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளி சிறுமி கேஹாசன் பாசுவுக்கு சர்வதேச குழந்தைகள் அமைதி விருது வழங்கப்பட்டது. நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் 16வது சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது வழங்கும் விழா நடந்தது. இதில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட துபாய் வாழ் சிறுமி கேஹாசன் பாசுவுக்கு அமைதிக்கான விருது வழங்கப்பட்டது. 

2006ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற வங்கதேசத்தின் முகமது யூனஸ் விருதினை வழங்கி கவுரவித்தார். கேஹாசன் தனது 8வது வயதிலேயே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பருவநிலை மாறுபாடு, உயிரினங்களிடம் அன்பு செலுத்துதல் குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார். இதற்காக தனது 12வது வயதில் ‘கிரீன் ஹோப்’ அமைப்பை நிறுவினார். இதில் 10க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 1,000 பேர் தன்னார்வ தொண்டர்களாக உள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...