News
Loading...

ஜெ., படத்திற்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் எம்.எல்.ஏ மயங்கி விழுந்து சாவு…!!

ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்திய… முன்னாள் எம்.எல்.ஏ மயங்கி விழுந்து சாவு…!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனி தொகுதியில் கடந்த 1984ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பால்சாமி.

எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி, அதன் பின்பு அவர் எந்த ஒரு முக்கிய பதவியையும் வகிக்கவில்லை.

வெறி கொண்ட ஒரு அதிமுகவினர்களில் இவரும் ஒருவர். சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதா இறந்த சம்பவத்தை அறிந்தார்.

அப்போது முதலே இனி கட்சி என்னவாகும், ஏதுவாகும் என்று புலம்பி வந்தார்.

இந்த நிலையில் பரமக்குடியில் உள்ள ஆயிரவைசிய பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சென்றார்.

அங்கு மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அவர் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவினார்.

அப்போது அங்கேயே மயங்கி விழுந்தார். மருத்துவ முகாமில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

ஆனால், அங்கு ஏற்கனவே இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். கட்சியின் நிலை என்னவாகும் என்று புலம்பி வந்த முன்னாள் எம்எல்ஏ பால்சாமி இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...