News
Loading...

பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோவையடுத்து லைவ் ஆடியோவும் வந்துவிட்டது

பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோவையடுத்து லைவ் ஆடியோவும் வந்துவிட்டது ...!

லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோவை அறிமுகப்படுத்திய பேஸ்புக் தற்போது லைவ் ஆடியோ வசதியையும் அறிமுகபடுத்தவுள்ளது.

2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் லைவ் ஆடியோவில் வானொலியில் கேட்பது போல பயனர்கள் தங்களது பேஸ்புக் பக்கங்களில் தற்போது நடக்கும் அண்மை ஒலிப்பதிவு செய்திகள், பேட்டிகள், இசைக்கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஒலிபரப்ப முடியும். அதுமட்டுமின்றி, கேட்டுகொண்டிருக்கும் போதே அந்த ஒலிபரப்பை மற்றவர்களுக்கு பகிர முடியும். வீடியோவில் பல மணி நேரம் லோடு ஆவது பலரும் விரும்பதகாதது. இதனை முறியடிக்கும் விதமாக ஆடியோ வந்துவிட்டது. தெளிவான நெட்வர்க் இல்லாத இடங்களில் கூட இந்த ஆடியோவை எளிதாக கேட்டு மகிழ முடியும்.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் பேஸ்புக் பயன்படுத்தும் பயனர்கள், பேஸ்புக் ஆப்பிலிருந்து வெளியேறினாலும், மொபைலை லாக் செய்தாலும் பேஸ்புக் லைவ் ஆடியோவை கேட்க முடியும். ஆப்பிள் கருவிகள் பயன்படுத்தும் பயனர்கள், ஒலிபரப்பை கேட்டுக்கொண்டே பேஸ்புக்கின் மற்ற பக்கங்களை படிக்க முடியும். மொபைலில் விளையாடுவது சாட் செய்வது போன்ற மற்ற செயல்பாட்டை செய்து கொண்டே இந்த ஆடியோவை கேட்க கூடிய வசதிகளும் லைவ் ஆடியோவில் உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...