News
Loading...

குடும்‌ப அட்டைகளில் 6 மாதங்களுக்கு புதிய உள்தாள்கள் ஒட்ட முடிவு

குடும்‌ப அட்டைகளில் 6 மாதங்களுக்கு புதிய உள்தாள்கள் ஒட்ட முடிவு

மிழகத்தில் புழக்கத்தில் உள்ள குடும்ப‌ அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலில், மின்னணு கு‌டும்ப அட்டைகளை வழங்‌க மே‌லும் கால அவகா‌சம் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குடும்‌ப அட்டைகளில் 6 மாதங்களுக்கு புதிய உள்தாள்கள் ஒட்ட முடிவு செய்யப்பட்டி‌ருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் அவர்கள் கூறினர். குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 47 சதவிகிதம் முடிந்துள்ளதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...