News
Loading...

தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களால் கவலை, விவசாயி மாரடைப்பால் உயிரிழப்பு

தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களால் கவலை, விவசாயி மாரடைப்பால் உயிரிழப்பு.

நாகையில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகியதால் மாரடைப்பு ஏற்பட்டு மேலும் ஒரு விவசாயி உயிரிழந்தார். மகாதானம் கிராமத்தை சேர்ந்த வீரமணி என்பவரின் நெற்பயிர்கள் போதுமான தண்ணீர் இல்லாததாலும், பருவமழை பொய்த்ததாலும் கருகியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வீரமணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, நாகை அரசு மருத்துவனைக்கு அவரை கொண்டு சென்றனர். அப்போது வீரமணியை பரிசோதித்த மருத்துவர்கள, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்