News
Loading...

பர்ஸ்ட் நைட்டில் பால் எதற்குங்க..?

பர்ஸ்ட் நைட்டில் பால் எதற்குங்க..?

ந்த காலத்தில் திரைப்படங்களில் பார்த்தால் முதலிரவு காட்சிகளில் ஹீரோயின் பால் செம்புடன் அறைக்குள் வருவார். நம்ம ஹீரோவிடம் பால் செம்பை நீட்டுவார் அவரும் செம்பை வாங்கி பாலை குடித்துவிட்டு மீதியை ஹீரோயினிடம் கொடுப்பார்.

அதென்னவோ தெரியவில்லை முதலிரவுக்கும் பாலுக்கும் அப்படி என்னதான் காம்பினேஷன்னு பார்ப்போமா?

இந்துக்களின் சடங்கு முறைகளில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலை புனிதமாக கருதுவதாலும், முதலிரவில் அருந்துவதாலும் வாழ்க்கை தூய்மையாக துவங்குவதாக கருதப்படுகிறது.

ஆதி கால மக்களுக்கு விவசாயம் தான் முதல் தொழிலாகவும், வாழ்வாதாரமாகவும் விளங்கியுள்ளது. விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்த பசுவை கடவுளாக மதித்தனர்.

பசுவின் சாணம் கிருமிநாசினியாகவும், பால் வலிமையை கொடுக்கும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் கூறுகின்றனர்.

பசுவும் அதன் மூலம் கிடைக்கும் பாலும் அதிர்ஷ்டம் என கருதினர். ஆகவே இல்வாழ்க்கையை ஆரம்பிக்கும் போது பால் பருகுவதால் வாழ்க்கையில் சந்தோஷம் நிலைக்கும் என்று கருதினர்.

முதலிரவில் அசதியாக இருக்கும் தம்பதியினருக்கு புத்துணர்ச்சியாகவும், உடலில் சோர்வை நீக்கி சுறுசுறுப்பையும் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

பாலில் உள்ள டிரிப்டோபென் என்ற அமினோ அமிலம் உடலை இலகுவாக வைக்க உதவுமாம். இதற்காகவும் முதலிரவில் பால் அருந்துவது முக்கியமாக கருதப்படுகிறது.

பாலில் குங்குமப்பூ மற்றும் மஞ்சள் போன்றவைகளை சேர்த்து பருகும்போது பாலுணர்வு தூண்டப்பட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதியருக்கு நல்ல பலனை கொடுக்கிறது.

பால் பருகுவதால் உடல் சூட்டை தணிக்கும் என்றும் திருமணமான புதுமண தம்பதிகள் சில மாதங்களுக்கு பால் அருந்துவதை நம் முன்னோர்கள் வழக்கமாக்கி வைத்திருக்கின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...