News
Loading...

ரூ.5 லட்சம் கோடி கொள்ளை..!? அரசு திட்டங்களில் 40% கமிஷன்..! மாவட்ட செயலாளர் வரை பகிர்வு!?

ரூ.5 லட்சம் கோடி கொள்ளை..!? அரசு திட்டங்களில் 40% கமிஷன்..! மாவட்ட செயலாளர் வரை பகிர்வு!?

மிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவின் வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில் கட்டுக்கட்டான பணம் மற்றும் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுமட்டுமல்லாமல், அவரிடமிருந்து சிக்கிய முக்கிய ஆவணங்கள் மூலம், ராமமோகன்ராவுக்கு ரூ.10,000 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளதாகவும், அவரின் மகன் துபாயில் ரூ.1,500 கோடி மதிப்பு ஓட்டல் வாங்கிய ஆதாரங்கள் இருப்பதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 2011ம் முதல் இதுநாள் வரை அரசு திட்டங்கள் அனைத்திலும் 40 சதவீதம் கமிஷன் தொகை பெறப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதாவுக்கு 25 சதவீதமும் மீதியுள்ள 15 சதவீதம் உயரதிகாரிகள் முதல் மாவட்ட செயலாளர் வரை பங்கீடு நடந்துள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவிலேயே இதுவரை நடந்திராத ஊழலாக இது இருக்கிறது என வருமானவரித் துறை அதிகாரிகளே பிரமித்துபோய் உள்ளதாகவும், தமிழகத்தில் இனிவரும் காலங்களில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்