News
Loading...

கமென்ட் கோயிந்து

கமென்ட் கோயிந்து

நாடாளுமன்ற விவாதத்திற்கு வீட்டிலேயே ஒத்திகை பார்க்கும் ராகுல் - செய்தி
சபையில சூப்பர் சிங்கர் பாட்டுப் போட்டிதான் நடக்குதுன்னு முடிவே பண்ணிட்டாய்ங்க போல... காஷ்மீர் பீட்டிஃபுல் காஷ்மீர்!

ரூபாய் நோட்டு தடையால் மும்பையில் குற்ற விகிதம் குறைந்துள்ளது: அமைச்சர் மனோகர் பாரிக்கர்
திருடுனவனுகளும் பழைய நோட்டை மாத்தறதுக்கு எந்த பேங்க் வாசல்ல நிக்கிறானுகளோ!

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு: செய்தி
‘‘அமைச்சரே, கவனித்தீரா?’’ ‘‘எதைச் சொல்றீங்க மேடம்?’’ ‘‘அதிரடியை விட்டுவிட்டானய்யா...’’

கள்ளத் தொடர்பை மனைவிக்கு எதிரான கொடுமை என கருத முடியாது - உச்ச நீதிமன்றம்
தீர்ப்பு சொல்லிட்டு வீட்டுக்குப் போன ஜட்ஜய்யாவோட நிலைமைய நெனைச்சாதான்...

பெங்களூரில் ஏ.டி.எம்மில் பணம் நிரப்பச் சென்ற வேன், ரூ.1 கோடியுடன் மாயம்: செய்தி
கவலைப்படாதீங்க ஆபீசர்... புது நோட்டோட போன வேன், பழைய நோட்டோட  திரும்பி வந்துரும்!

துணைவேந்தர் கையெழுத்தில்லாமல் சென்னைப் பல்கலைக்கழக பட்டமா? - அன்புமணி கண்டனம்
கைரேகை வைக்காம விட்டாய்ங்களேன்னு சந்தோஷப்படுங்க தல, இப்பல்லாம் ரேகைதான் ஃபேஷன்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...