News
Loading...

ஆஹாங் அவார்ட்ஸ் - டயலாக் டார்ச்சர்ஸ் - சாங் டெடிகேட்

ஆஹாங் அவார்ட்ஸ் - டயலாக் டார்ச்சர்ஸ் - சாங் டெடிகேட்

ஆஹாங் அவார்ட்ஸ்

‘சேதாரம் இருந்தாலும் ஆதாரம் இருக்கு’ விருது : `ஜெயலலிதா, சீட்டு கம்பெனியில் முதலீடு செய்ததற்கே சசிகலாவைத்தான் வாரிசுதாரர் ஆக்கினார்’ என்று ஒண்ணுக்கும் ஆகாத ஆதாரத்தை உசத்திப் பிடிக்கும் பொன்னையனுக்கு!

‘அடடடா அப்பப்பா’ விருது : சசிகலாவுக்கு எதிராக தன் சகோதரி போர்க்கொடி தூக்கினாலும் ‘சின்ன அத்தை, சின்ன அத்தை’ என்று சசிகலாவை வாய்க்கு வாய் அழைத்து அபார ஆதரவு காட்டும் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக்குக்கு!

‘அம்மா...அம்மம்மா’ விருது : இதுவரை இவரது வாய்ஸ் எப்படி இருக்கும் என்றே தெரியாவிட்டாலும் அ.தி.மு.க-வில் இருக்கும் அத்தனை பேரையும் தனக்கு வாய்ஸ் கொடுக்கவைத்த சசிகலாவுக்கு!

‘டீச்சர் என்னைக் கிள்ளிட்டான்’ விருது : இணையத்தில் அவதூறு பரப்புகிறார்கள் என்று பொசுக், பொசுக்கென்று போலீஸ் கமிஷனர் ஆபீஸ் போகும் சி.ஆர்.சரஸ்வதிக்கு!


‘தாறுமாறா டங் ஸ்லிப் ஆகுமோ?’ விருது : ஏற்கெனவே, ஜெயலலிதா இருந்தபோது உளறிக்கொட்டியதைப் போல இப்போதும் ஏதாவது உளறிவிடுவோமோ என்று உள்ளுக்குள் உதறும் நாஞ்சில் சம்பத்துக்கு!

‘படுத்தேவிட்டார்கள் ஐயா’ விருது : சசிகலாவுக்கு எதிராகக் கொடி பிடிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் வேகவேகமாக வெள்ளைக்கொடி ஆட்டி, சட்டென்று சரண்டர் ஆன செங்கோட்டையன், தம்பித்துரை, எடப்பாடி பழனிசாமி வகையறாக்களுக்கு!

டயலாக் டார்ச்சர்ஸ்

‘உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன்’ டயலாக்கைப் புலம்பி புழுங்கிச் சொல்பவர், வேற யாரு, சசிகலா புஷ்பாதான்!

ஆஹாங் அவார்ட்ஸ் - டயலாக் டார்ச்சர்ஸ் - சாங் டெடிகேட்

‘இப்படி வருவேன்னு எதிர்பார்க்கலைல்ல’ டயலாக்கை காலரைத் தூக்கிவிட்டு கர்வமாய்ச் சொல்பவர், ஜெயலலிதா இருந்தபோது பணிவு காட்டி, இப்போது ஆக் ஷன் முதல்வராய் ஆங்காங்கே தலைகாட்டும்
ஓ.பன்னீர்செல்வம்!

‘அப்டியே ஷாக் ஆகிட்டோம்’ டயலாக்கைத் திகிலுடன் சொல்பவர்கள், செங்கோட்டையன், தம்பித்துரை, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பலே பல்டிகளைப் பார்த்து திகைத்துப்போன ரத்தத்தின் ரத்தங்கள்!

சாங் டெடிகேட் பண்றோம்

‘சண்டக்கோழி சீறும் சீறும்’ பாட்டை டெடிகேட் பண்றோம் சசிகலாவுக்கு எதிராக சரிக்குச் சரியாக மல்லுக்கட்டும் தீபாவுக்கு!

ஆஹாங் அவார்ட்ஸ் - டயலாக் டார்ச்சர்ஸ் - சாங் டெடிகேட்

‘யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்’ பாட்டை டெடிகேட் பண்றோம் ஒட்டுமொத்தக் கட்சிக்காரர்களும் சரண்டர் ஆனாலும் ‘எதுக்கும் கொஞ்சம் யோசிங்க’ என்று மென்று முழுங்கும் நடிகர் ஆனந்தராஜுக்கு!

‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’  எம்.ஜி.ஆர் பாட்டை டெடிகேட் பண்றோம் உண்மையான  எம்.ஜி.ஆர் தொண்டர்களுக்கு!


எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்:  அதெப்படிங்க இந்த அ.தி.மு.க-காரங்க யார் காலிலும் கொஞ்சம்கூட கூச்சப்படாமல் விழுறாங்க?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்