News
Loading...

ஓ.பன்னீர்செல்வம் கட்அவுட்டுக்கு தடை! மீறி வச்சீங்க… தொலைச்சிடுவோம்… தொலைச்சி!

ஓ.பன்னீர்செல்வம் கட்அவுட்டுக்கு தடை! மீறி வச்சீங்க… தொலைச்சிடுவோம்… தொலைச்சி!

ரும்29 ஆம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க.பொதுக் குழுவுக்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் செய்து வருகின்றனர்.

விசாரித்தபோது, நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க ஒரு சிலர் முடிவு செய்துள்ளனர்.

அப்படி சசிகலாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினாலோ, கண்டனம் தெரிவித்தாலோ சசிகலாவுக்கு அவமானம் ஏற்படுவது உறுதி.

அதை தவிர்க்க செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள ஏதுவாக தனியார் சொகுசு விடுதிகளை ஒரு குழு வியாபித்திருக்கிறது.

அவர்களை குறிப்பிட்ட நேரத்துக்கு சொகுசு பேருந்தில் அழைத்துக்கொண்டு வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் சேர்ப்பார்கள்.

முன்னேற்பாட்டின்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அந்த காகிதம் போயஸிக்கு போகும்.

அப்புறம் அந்த சின்னம்மா பந்தாவாக வானகரம் வருவார். தீர்மானித்தவர்களுக்கு வெகுமதிகள் அள்ளி தருவாராம்.

மேலும், எம்.ஜி.ஆர். ஜெ, சசிகலா படங்களை தவிர வேறு யாருடைய படங்களையும், பேனர், கட் அவுட்டாகவோ அல்லது போஸ்டராக ஒட்ட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படங்களை பொதுக்குழு நடக்கும் இடத்தில் வைக்கவே கூடாதாம். வைத்தால் தொலைச்சிடுவார்களாம்.

அதுமட்டுமல்ல, பொதுக்குழு நடக்கும் இடத்தில் கட்சியினர் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஜெயலலிதா காலத்துல பொதுக்குழு கூட்டம் நடக்கும் போது போட்டோகிராபர்களை மட்டும் உள்ளே அழைத்து போட்டா எடுக்க வாய்ப்பு தரப்படும்.

ஆனால் இந்த முறை போட்டோகிராபர்களைக் கூட உள்ளே அனுமதிக்காமல், கட்சித் தலைமையே பொதுக்குழு நடக்கும் புகைப்படத்தை எடுத்து அந்தந்த பத்திரிகைகளுக்கு இ-மெயில் அனுப்பிவிடுவார்களாம்.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்று பக்கத்தில் இருந்தவர் செல்லில் ரிங்டோன் ஒலிக்க நம்முடன் பேசிக்கொண்டிருந்தவரை வழியனுப்பிவைத்தோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்