News
Loading...

ஜெயலலிதா எப்பப்பா சரியாகி வருவாங்க..! கண்களை குளமாக்கும் ஒரு சிறுமியின் கதறல்

ஜெயலலிதா எப்பப்பா சரியாகி வருவாங்க..! கண்களை குளமாக்கும் ஒரு சிறுமியின் கதறல்

றைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தை டி.வியில்  பார்த்து ஒரு சிறுமி கதறி அழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தமிழக பெண்களை ஜெயலலிதாவின் மரணம் பெரிதும் பாதித்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவை தாங்க முடியாத அதிர்ச்சியில் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர்.



இந்நிலையில் டி.வி யில் ஒளிப்பரப்பாகி கொண்டிருப்பது ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் அவர் இறந்து விட்டார் என்பதை அறியாத  5வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தனது அப்பாவிடம் “எப்பப்பா ஜெயலலிதா சரியாகி வருவாங்க” என்று கேட்டு கதறி அழும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி பார்ப்போரையும் கண் கலங்க வைத்து வருகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்