News
Loading...

விருது பெற்ற காகித ஹெல்மெட்!

விருது பெற்ற காகித ஹெல்மெட்!

நாம் அணியும் ஹெல்மெட், கவசமாக மாறி மேல்மாடியை காப்பாற்றினாலும் அதனை கையிலேயே வைத்திருப்பது பெரும் சுமைதானே? அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் எளிதாக கையிலே மடித்துக்கொள்ளும் காகித ஹெல்மெட்டைக் கண்டுபிடித்து நம் தலைபாரம் குறைத்துள்ளார். 

ஆனால் எனன, இது சைக்கிள்களுக்கானது!   நியூயார்க்கைச் சேர்ந்த 28 வயதான ஐஸிஸ் ஷிஃபர் என்ற பெண்தான் காகித இகோ ஹெல்மெட்டின் பிரம்மா. சைக்கிள் ஓட்டுவதற்கு எளிதாகக்  கிடைத்தாலும், ஹெல்மெட்டிற்கு நாம் தனியாக செலவு செய்யவேண்டியுள்ளது. பயன்படுத்த  அதிகமாகவும் கிடைப்பதுமில்லை என்பதால் இந்த இடைவெளியை நீக்க விரும்பினேன் என ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் இந்த இளம் விஞ்ஞானி.   

தனது எளிதில் மடித்துக்கொள்ளும் காகித ஹெல்மெட்டிற்காக அமெரிக்காவில் கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்படும் தேசிய விருதான ஜேம்ஸ் டைஸன் விருதையும் பெற்று அசத்தி யுள்ளார் ஐஸிஸ் ஷிஃபர். மொத்தம் 22 நாடுகளிலுள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களிலுள்ள பொறியாளர்களின், வடிவமைப்பாளர்களின் திறமைக்கு மரியாதை செய்யும் விருது இது. 

விருதோடு பரிசுத்தொகையான 25 லட்சத்து 37 ஆயிரத்து 874 ரூபாயை ஐஸிஸ் ஷிஃபர் தனது திறமையால் வென்றுள்ளார் என்பது பெருமைதானே! நான் பெரிய பொறியாளர் கூட கிடையாது. எனக்கு விருது கிடைத்ததை நம்பவே முடியவில்லை. சிறிது நம்பிக்கை வந்தவுடன் அம்மாவிடம்தான் அதை முதலில் சொன்னேன்’’ என உற்சாகமாக ஹெல்மெட்டை தடவியபடி பேசுகிறார் ஐஸிஸ் ஷிஃபர்.

ஹெல்மெட்டின் வலுவான தேன்கூடு அமைப்புதான் இதன் பெரும் பலம். பெரும்பாலும் குறிப்பிட்ட சைஸே அனைவருக்கும் பொருந்தும். தலைக்கு முழுமையாக உரிய பாதுகாப்பு தரும் ஹெல்மெட் இது என்கிறார் நியூயார்க்கின் பிராட் டிசைன் மைய பட்டதாரியான ஐஸிஸ் ஷிஃபர். இந்த இகோ ஹெல்மெட்டின் வடிவமைப்பு, திறனுக்கு லண்டனில் உள்ள ராயல் ஆர்ட் இம்பீரியல் கல்லூரி கேரண்டி தருகிறது. இந்த ஹெல்மெட்டை மேலும் சிக்கென மாற்றி விற்க லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.

ஹெல்மெட்டுக்கு அழகு மட்டும் போதாது என்பதை உணர்ந்த ஷிஃபர், மழைக்காலத்திற்கு ஏற்ப வாட்டர்ப்ரூஃப் வசதி, எளிதில் மட்கும், மறுசுழற்சி தன்மை யுடன் இதனை உருவாக்கியுள்ளார். இகோ ஹெல்மெட்டின் விலை 341 ரூபாயாக இருக்கலாம். இதனை சைக்கிளை வாடகைக்கு எடுக்கும் இடத்திலுள்ள எந்திரத்தில் கட்டணம் செலுத்தி பெறலாம். தற்போது மழையில் சென்றால் 4 மணிநேரங்களுக்கு தாக்குப் பிடிக்கிறது இந்த இகோ ஹெல்மெட்.  தலை காத்த பெண்!     

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...