News
Loading...

புயலால் வீடிழந்த 40 பேருக்கு, தலா ரூ.2.03 லட்சம் அமைச்சர்கள் நிதி உதவி வழங்கினர்.

புயலால் வீடிழந்த 40 பேருக்கு, தலா ரூ.2.03 லட்சம் அமைச்சர்கள் நிதி உதவி வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், வர்தா புயலால் பாதிக்கப்பட்டு வீடிழந்த 40 பேருக்கு, தலா 2 இலட்சத்து 3,000 ரூபாய் ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை, பொன்னேரியில் அமைச்சர்கள் வேலுமணி, அன்பழகன், பெஞ்சமின், காமராஜ், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வழங்கினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, திருவள்ளூர் மாவட்டத்தின் 5 நகராட்சிகளில் 95 விழுக்காடு சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாக தெரிவித்தார். முன்னதாக, நாலூர், சிருவாக்கம் கிராமங்களுக்கு சென்ற அமைச்சர் காமராஜ், நூற்றுக்கணக்கான ஏக்கரில் பாதிக்கப்பட்டிருந்த நெற்பயிரை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...