News
Loading...

உங்கள் தெருவில், உங்கள் மக்களுக்கு உதவுங்கள்: வர்தா புயல் குறித்து ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி

சென்னை: வர்தா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று நடிகர் ஆர்.ஜே.பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

சென்னையை கடந்த வர்தா புயலால், பலத்த சூறாவளிக் காற்றுடன், கனமழை பெய்தது. இதனால் ஏராளமான மரங்கள் சாலைகளில் விழுந்தன. பல்வேறு இடங்களில் வீடுகள், வணிக வளாகங்கள், ரயில் நிலையங்களில் மேற்கூரைகள் பறந்தன. மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு, நகரம் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் சென்னை முழுவதும் மிகுந்த சோகத்தில் காணப்படுகிறது.

இதற்கிடையில் பொதுநலன் தொடர்பான விஷயங்களில் ரேடியோ ஜாக்கியும், நடிகருமான பாலாஜி தொடர்ந்து தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அவருடைய பதிவுகளுக்கு சமூக வலைத்தளங்களில் எப்போதுமே மிகுந்த வரவேற்பு உண்டு. கடந்த ஆண்டு சென்னை வெள்ளத்தில் நடிகர் சித்தார்த் உடன் இணைந்து, பொதுமக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்.

இந்நிலையில் தற்போது சென்னையை வர்தா புயல் தாக்கியதால், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆர்.ஜே.பாலாஜி எந்தவித பதிவுகளும் போடவில்லை என்று ஒருதரப்பினர் கருத்துக்களை பரப்பி வந்தனர். இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி தனது டிவிட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதில் தன்னுடைய தெருவில் உள்ள மக்களுடன் சேர்ந்து, மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறி, அனைவரும் இதனை பின்பற்றுமாறும் வலியுறுத்தியுள்ளார்.



முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்