News
Loading...

ஜெ.வின், சொத்து இவர்களுக்கு தான் சேரும்!!..பிரபல பத்திரிக்கையாளரின் பரபரப்பு தகவல்!!…

ஜெ.வின், சொத்து இவர்களுக்கு தான் சேரும்!!..பிரபல பத்திரிக்கையாளரின் பரபரப்பு தகவல்!!…

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து அவரது ரத்த சொந்தங்களுக்கு தான் சேரும் என மூத்த பத்திரிகையாளரான இந்து என்.ராம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது தோழி சசிகலா ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தினார் .

இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவர் மூத்த பத்திரிக்கையாளர் இந்து என்.ராம். அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்ட சக்திகள் அரசாங்கத்தை வழிநடத்தக் கூடாது என்று ராம் கூறியிருந்தார்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று சசிகலாவை வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கும் இந்து ராம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தாலும், அதை நம்பி குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தால், அது பேரழிவை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்தார்

இதனிடையே, இரு தினங்களுக்கு முன்பு திடீரென போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்ற இந்து ராம் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து, ஜெயலலிதாவின் சொத்துக்கள் அவரது ரத்த உறவுகளுக்கு தான் செந்தம் என இந்து ராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்