News
Loading...

தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

சென்னையில் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலுரைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வருமான வரித்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில், 131 கோடி ரூபாயும், 171 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. சேகர் ரெட்டி பணம் பதுக்கியதில் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தி வருகிறது. சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்னும் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெறும் எனத் தெரிகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...