News
Loading...

கண்டம் விட்டு கண்டம் தாவும் அக்னி-5 ஏவுகணை இன்று சோதனை

கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' ஏவுகணை இன்று சோதனை

ண்டம் விட்டு கண்டம் தாவி இலக்கைத் தாக்கக்கூடிய அக்னி -5 ஏவுகணையை இந்தியா இன்று சோதனை செய்ய உள்ளது.

இந்த ஏவுகணை 5.500 கிலோமீட்டர் முதல் 5.800 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. குறிப்பாக வடக்கு சீனா வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு நோக்கில் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 50 ஆயிரம் கிலோ எடை கொண்ட அக்னி-5, 17.5 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும் கொண்டது.

ஒடிசா மாநிலம் பலாசோர் பகுதியில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்த சோதனை நடைபெறவுள்ளது. இதற்கான நான்கு கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக இ‌ந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன் இதே இடத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி‌15ஆம் தேதி ஏவுகணை சோதனை ந‌டத்தப்பட்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்