News
Loading...

அடுத்த மாதம் ஒரே ராக்கெட்டில் 83 செயற்கை கோள்கள்

அடுத்த மாதம் ஒரே ராக்கெட்டில் 83 செயற்கை கோள்கள்

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியில் விண்ணில் செலுத்தும் பணியை இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஒரே ராக்கெட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட செயற்கைக்கோள்களை இஸ்ரோ இதற்கு முன்பு பலமுறை ஏவியுள்ளது. இந்நிலையில் முதல் முறையாக பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 80 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள், 3 உள்நாட்டு செயற்கைக்கோள்கள் என மொத்தம் 83ஐ இஸ்ரோ அடுத்த மாத துவக்கத்தில் விண்ணில் ஏவவுள்ளது. இத்தகவலை பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில நேற்று தெரிவித்தார். இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் 80 செயற்கைக்கோள்கள்கள் மற்றும் நானோ செயற்கைக்கோள்கள் இதில் அனுப்பப்படுகின்றன. இவற்றின் மொத்த எடை 500 கிலோ.

இது தவிர இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக்கோள் 730 கிலோ எடையிலும், ஐஎன்எஸ்-1ஏ மற்றும் ஐஎன்எஸ்-1பி ஆகிய செயற்கைக்கோள்கள் 30 கிலோ எடையிலும் அனுப்பப்படவுள்ளது. ஒரு சுற்றுவட்டபாதையில் ராக்கெட்டை செலுத்தி, அனைத்து செயற்கைக்கோள்களையும் நிலைநிறுத்துவது இஸ்ரோவுக்கு சவாலான பணியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே வரும் 7ம் தேதி  புவி ஆய்வு செயற்கைக்கோள் ரிசோர்ஸ்சாட்-2 ஏவப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...