News
Loading...

பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் டிசம்பர் 30ந் தேதிக்கு பிறகும் நீடிக்கலாம்

பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் டிசம்பர் 30ந் தேதிக்கு பிறகும் நீடிக்கலாம்

ங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் டிசம்பர் 30க்குப் பின்னரும் நீடிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் அறிவித்தார். டிசம்பர் 30 வரை செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கிகளில் வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒரு வாடிக்கையாளர் தனது கணக்கில் இருந்து எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 

ஏ.டி.எம்களிலும் ஒரு டெபிட் கார்டை கொண்டு நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை மட்டுமே எடுக்கவும் வகை செய்யப்பட்டது. ஆனால் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் போதுமான அளவிற்கு புழக்கத்திற்கு வராத காரணத்தினால் வங்கிகளால் வாடிக்கையாளர்களுக்கு வாரத்திற்கு தலா 24 ஆயிரம் ரூபாயை வழங்க முடியவில்லை. ஏ.டி.எம்களிலும் தடையின்றி பணம் கிடைக்க வழிவகை செய்ய முடியவில்லை. 

இந்த நிலையில் பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அத்துடன் டிசம்பர் 30ந் தேதி வரை பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். டிசம்பர் 30க்கு பிறகு பணத்தட்டுப்பாடு பிரச்சனை தீரவில்லை என்றால் பொதுமக்கள் தன்னை தண்டிக்கலாம் என்றும் மோடி கூறியிருந்தார்.

டிசம்பர் 30ம் தேதிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், பணத்தட்டுப்பாடு பிரச்சனை குறைந்தபாடில்லை. மேலும் ரிசர்வ் வங்கி அச்சடித்து விநியோகம் செய்து வருவதாக கூறும் புதிய ரூபாய் நோட்டுகளும் வங்கிகளை முழுமையாக சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது. எனவே டிசம்பர் 30ந் தேதிக்கு பிறகு பணம் எடுக்க மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கப்படாது என்றே வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...