மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து லண்டன் டாக்டர் ரிச்சர்டு பேலே தலைமையிலான மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்துவந்தனர்.
இதனையடுத்து, நன்றாக உடல்நலம் தேறிவருவதாகவும் கூறப்பட்ட நிலையில், கடந்த 5ம் தேதி திடீரென மாரடைப்பால் மரணமடைந்ததாக அறிவித்தனர். அதன் பிறகு அவரின் உடல் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் போயஸ் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அவரின் உடல் அடக்கத்திற்குப்பின், ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வகையில், அவரை கொன்று உடலை பதப்படுத்தி வைத்திருந்ததகாகவும், அவரின் கால்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் ஏராளமான புகைப்படங்களும், செய்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன.
இந்நிலையில், ஜெயலலிதா கொல்லப்படுவார் என 40 பக்கம் கொண்ட புகார்கரை கடந்த 2014ம் ஆண்டிலேயே ஆதாரங்களுடன் போலீசில் கொடுத்ததாக ‘அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பு’ தெரிவித்துள்ளது.
இதற்கான ஆதாரங்களை இன்று 4 மணிக்கு வெளியிட உள்ளதாகவும், அதற்கான பத்திரிகையாளர் அழைப்பையும் தற்போத வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்டுள்ளது.
சசிகலாவை பொதுச்செயலாளராக பொறுப்பேற்பது குறித்து முடிவெடுக்க அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நாளை கூடவுள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வாட்ஸ்அப் செய்தியால் சசிகலாவும் மற்றும் அவரது ஆதரவு அதிமுகவினர் கதிகலங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்