News
Loading...

ஜெயலலிதா என்ற சகாப்தத்தை முடித்து வைத்த சசிகலா...

தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர்

ஜெயலலிதா என்ற சகாப்தத்தை முடித்து வைத்த சசிகலா.

நம் வாழ்க்கையில் எத்தனை எதிரி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் ஒரு துரோகி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம் தான் சசிகலா.

யார் இந்த சசிகலா? எம்.ஜி.ஆர் அவர்கள் ஜெயலலிதா அவர்களுக்கு உதவியாக வீட்டு வேலை செய்ய ஒரு பெண் வேண்டும் என்று நடராஜன் அவர்களிடம் கூறி உள்ளார். உடனே அந்த நடராஜன் தன் மனைவியான சசிகலாவை அந்த இடத்திற்கு அனுப்பி இருக்கிறார்.

அவ்வாறு அனுப்பப்பட்ட சசிகலா ஜெயலலிதா வீட்டில் வேலை செய்து அவரிடம் நெருங்கி பழகி உள்ளார். எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஆட்சி ஜெயலலிதா கைக்கு வர சசியின் ஆட்டம் ஆரம்பம் ஆனது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவ்வபோது போயஸ் கார்டனுக்கு வந்து செல்வது இவர்களுக்கு பிடிக்கவில்லை. அந்த பெண் வளர வளர ஜெயலலிதாவின் முக தோற்றம் தெரிய ஆரம்பித்தது.

ஆகையால் ஜெயலலிதாவின் அண்ணன் இறந்த பிறகு அவரின் உறவு முறையையும் துண்டித்து விட்டனர். அதன் பின் சசி குடும்பம் மட்டுமே ஜெயலலிதாவை சுற்றி இருந்தது.

ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு வர முக்கிய காரணமே சசி குடும்பம் தான். ஆம் மக்களே சசிகலாவின் சகோதரி வணித்தாமனியின் மகனான சுதாகரனை ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக தத்தெடுக்க வைத்து ஒரு பிரம்மாண்டமான திருமணத்தை தமிழகத்தில் செய்தார்களே. அது தான் ஜெயலலிதாவின் சரிவிற்கு ஆரம்பமாக அமைந்தது.

பின்பு இவர்கள் சூழ்ச்சியை புரிந்து கொண்ட ஜெயலலிதா இவர்களை ஒதுக்க ஆரம்பித்தார். இவ்வாறு பலமுறை கார்டனில் இருந்து துரத்த பட்ட நபர் தான் சசிகலா.

இப்படி ஒவ்வொரு முறையும் சசிகலாவை துரத்தியதற்கான காரணம் துரோகம். கடைசி முறை துரத்தப்பட்ட போது அதன் காரணம் பரவலாக தமிழக மக்களுக்கு தெரிய துவங்கியது. ஆம் அது தான் ஸ்லோ பாய்சன். 

மாண்பு மிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருந்த செயல் வெளிப்படையாக பலருக்கு தெரிந்துவிட்டது.

கூடுதலாக தனது ஆதரவு எம்.எல்.ஏ –வை அவ்வபோது கூட்டி முதல்வருக்கு தெரியாமலே பேசி உள்ளனர். இதையெல்லாம் அறிந்த ஜெயலலிதா அவரையும் அவர் குடும்பத்தையும் துரத்தி உள்ளார்.

இப்படி ஒவ்வொரு முறை துரத்திய பிறகும் அவர் எப்படியாவது மீண்டும் வந்து சேர்ந்து விடுகிறார்.

இந்த முறை அவர் ஜெயலலிதாவை எதிர்க்கும் அளவிற்கு அவருக்கு துணிச்சல் வந்து விடுகிறது. கடைசியாக போயஸ் கார்டனில் நடந்தது என்ன? அவர் எந்த காரணதிற்காக மருத்துவமணையில் சேர்க்க பட்டார் என்பதில் பல மர்மங்கள் உள்ளது.

அப்போலோ மருத்துவமணையில் எத்தனையோ தலை சிறந்த மருத்துவர்கள் இருக்கும் போது சசிகலாவின் தம்பி திவாகரனின் மகள் மட்டும் அருகில் இருக்க காரணம் என்ன இது பல பத்திரிகைகளுக்கு கூட தெரியாதவிசயம்.

(சசிகலாவின் தம்பி திவாகரனின் மகள் அப்போலோவில் தான் டாக்டராக பணிபுரிகிறார்)

ஒருவேலை ஜெயலலிதா குணமாகி செயற்கையான முறையில் இதய அடைப்பு வரவைக்க பட்டதா என்ற சந்தேகமும் வருகிறது.

அதுமட்டும் அல்லாமல் இறந்த ஜெயலலிதா உடலில் Embalming செய்யப்பட்டு உள்ளது. இந்த எம்பாம்மிங் என்பது உடலில் உள்ள இரத்தத்தை வெளியில் எடுத்து விட்டு அதற்கு ஈடான திரவத்தை செலுத்தி அந்த உடலை கெடாமல் பல நாட்கள் வைத்து இருப்பது தான். 

இந்த எம்பாம்மிங் மூலம் இறந்த உடலை பலநாட்களோ அல்லது மாதங்களோ  கெடாமல் வைக்கமுடியும். அது எம்பாம்மிங் செய்யும் முறையை பொறுத்தது.

ஜெயலலிதா இறந்தது இரவு 11.30 என்றால் எப்படி இவ்வளவு விரைவாக Embalming செய்ய பட்டது அதற்கான ஆட்கள் எப்படி கிடைத்தார்கள். பொதுவாக ஒரு பிரபலத்தை வெகு நாட்கள் வைத்து இருக்க தான் இந்த முறை செய்யப்படும். சாதாரண மனிதர்கள் இறந்த உடன் Embalming செய்யும் அளவிற்கு வசதி கிடையாது அவர்களும் அத்தனை நாட்கள் உடலைவைத்து இருக்க மாட்டார்கள்.

இவ்வாறு Embalming செய்த உடலை ஒரே நாளில் ஏன் எடுக்கவேண்டும்.  மக்கள் பார்வைக்கு கூடுதலாக சில நாட்கள் வைத்து இருக்கலாமே ஏன் வைக்கவில்லை.

நீங்கள் எம்பாம்மிங் செய்யவில்லை என்று மறுத்தால் 75 நாட்கள் மருத்துவமணையில் அனுமதிக்க பட்ட நபர் உடல் எப்படி இருக்கும் என்று மக்கள் அனைவருக்கும் தெரியும்.

இதே போல் ஜெயலலிதா இறந்த அரைமணி நேரத்திற்குள் ஆளுநரிடம் அடுத்த முதல்வருக்கான பதவியை தேர்ந்து எடுக்க அனைத்து எம்.எல்.ஏ -களும் தயாராகிவிட்டீர்கள் இதுவும் சாத்தியம் இல்லாத ஒன்று.

இதில் இருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது ஜெயலலிதா இறந்த நேரம் இரவு 11.30 இல்லை. அவர் அதற்க்கு முன்பே இறந்துவிட்டார் அது ஒருநாட்கள் முன்பா இல்லை சில மாதங்களுக்கு முன்பா என்பது தான் சந்தேகம்.

கூடுதலாக உங்கள் விஷயம் அனைத்தையும் அறிந்த இரண்டாவது நபர் சோ அவர்கள் மறுநாளே இறந்ததாக செய்தி வருகிறது. 

சோ -வும் அதே அப்போலோ மருத்துவமணையில் தான் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆகயால் இது கொலையாக இருக்குமோ என்ற சந்தேகமும் இயல்பாகவே வருகிறது.

இப்போது மக்களுக்கு வர இயல்பான சந்தேகம் ஜெயலலிதா எப்போது இறந்தார்? இறந்த தேதியை சரியாக சொன்னால் வரும் வருடத்திலாவது சரியான தேதியில் துக்கம் அனுசரிக்க முடியும். 

நீங்கள் காட்டியது உண்மையிலே ஜெயலலிதா உடல்தனா? 75 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இடையில் ஒரு புகைப்படம் கூட ஏன் வெளியிடவில்லை. எம்.ஜி.ஆர் காலத்திலே அவர் மருத்துவமணையில் இருந்தபோது புகைப்படம் வந்து உள்ளதே.

இந்தகாலத்தில் முழு CCTV வீடியோவையே உங்களால் கொடுக்க முடியும் ஆகயால் முதல்வர் மருத்துவமணையில் உயிருடன் இருந்ததாக சொல்லப்படும் 75 நாட்களுக்கான வீடியோவை உங்களால் கட்டாயம் கொடுக்க முடியும். ஆகயால் அதை நீங்கள் வெளிபடுதியே ஆகவேண்டும்.

இதன்மூலம் நீங்கள் காட்டியது ஜெயலலிதா உடல் தனா என்பதையும் நிருபிக்க வேண்டும்.

இந்த கேள்விக்கான பதில் கிடைக்கும் வரை ஒவ்வொரு மக்களும் ஷேர் செய்யுங்கள். நன்றி.

இப்படிக்கு என்றும் மக்கள் பணியில்

Dr,B.R.தாமோதரன் யாதவ்,MA,BL
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர்
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in
www.tamilnadusamajwadiparty.in

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.