News
Loading...

ஜெ., 2 கால்கள் நவம்பர் 18ம் தேதியே வெட்டி.. எரித்து விட்டார்கள்…!?

ஜெ., 2 கால்கள் நவம்பர் 18ம் தேதியே வெட்டி.. எரித்து விட்டார்கள்…!?

றைந்த முன்னாள் முதல்வர் ஜெ. மருத்துவமனையில் பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டது.

ஆனால், அந்த அறிக்கையில் உள்ளவற்றை எதிர் கட்சியினர் மற்றும் அதிமுக

தொண்டர்கள் யாரும் நம்பவில்லை. அது மட்டுமல்ல ஒரு ஈ காக்காவைக் கூட அம்மாவைப் பார்க்க அனுமதிக்க வில்லை சசி தரப்பு.

அதனால் தான் பலவிதமான யூகங்கள் கிளம்பியது. வதந்திகள் கிளம்பியது. அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை சசிகலா. டெல்லியின் அழுத்தங்களும் அதிகமானது.

கடந்த டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி மாரடைப்பு என்று கூறினார்கள். இரவு ஜெ., இறந்து விட்டதாக அறிவித்தார்கள். ஒரு மாதம் முடியப் போகிறது.

ஜெ., மரணம் பற்றிய பல்வறு சந்தேகங்கள் இன்னும் உலவிக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில், பிரபல தமிழ் வாரஇதழ் ஜெயலலிதாவின் கால்கள் எங்கே என்றும் அவரது பயோடேட்டாவில் அவரின் உயரம் 5.5 அடி என்றும், சவப்பெட்டியின் அளவு 6 அடி என்றும் ஜெயலலிதா உடல் இருப்பதோ 3 1/2 அடி என்று அதில் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் இன்னொரு யூகமும் சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவுகிறது. பிரான்ஸ் தமிழச்சி கிளப்பிய பூதம் இது என்கிறார்கள்.

அதாவது நவம்பர் பதினெட்டாம் தேதிதான் அழுகிய நிலைக்கு போன அம்மாவின் இரண்டு கால்களும் ஆப்ரேஷன் மூலம் வெட்டி எடுக்கப்பட்டதாம்.

கால் மூட்டுகளுக்கு கீழே இரண்டு கால்களும் நீக்கப்பட்டு பட்டிணப்பாக்கம் கடற்கரையில் யாரும் இல்லாத இடமாகப் பார்த்து எரித்தார்கள் என்கிறார்கள்.

ஜெ., ஒருமுதல்வராக இருந்தார். அவரின் மருத்துவ சந்தேகங்களை பொதுவெளியில் யார் வேண்டுமானாலும் கேட்கலாம் என்கிற நிலையில், அந்த சந்தேகங்களுக்கு ஏன் பதிலளிக்காமல் மவுனம் சாதிக்கிறார்கள்.

ஆனால், தற்போது பதவிகளை மட்டுமே தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

கேட்கவே பகீர் என்று இருக்கிறது. இது எந்த அளவிலான உண்மை என்பதை மருத்துவமனையோ..அல்லது சசிகலா தரப்போ தான் விளக்க  வேண்டும்

(கால்கள் படம் மாடல்)

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...