News
Loading...

ஜெ., அண்ணன் மகள் தீபாவை தொடர்ந்து களமிறங்கும் தங்கை மகள் அம்ருதா!!

ஜெ., அண்ணன் மகள் தீபாவை தொடர்ந்து களமிறங்கும் தங்கை மகள் அம்ருதா!!.. இது எங்க போய் முடிய போகுதோ ?!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், இயற்கையான மரணம் அல்ல, அதி திட்டமிட்ட சதி என்று பல சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.

இதனையடுத்து , மறைந்த முதல்வரின் அண்ணன் மகள் தீபா தனது அத்தை இயற்கையாக மரணிக்கவில்லை, அவரது இறப்பு சதி, இதற்கு காரணம் சசிகலா தான் என பகிரங்க குற்றசாட்டை முன் வைத்தார்.

மேலும், தான் போயஸ் கார்டனில் பிறந்ததாகவும், சசிகலா தனது குடும்பத்தை வீட்டை விடு வெளியேற்றியதாகவும், தற்போது அனைத்து சொத்துகளையும் அபகரிக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறினார். மேலும் போயஸ் தோட்ட இல்லம் தங்கள் குடும்பத்திற்கே சேரும் எனவும் கூறினார்.

இதனைதொடர்ந்து, தற்போது இதேபாணியில் களமிறங்கி இருப்பவர் ஜெயலலிதாவின் தங்கை மகள் அம்ருதா. இவரும் ஜெயலலிதாவின் மரணம் சதி, அவரை சசிகலா தான் ஏதோ செய்துவிட்டார் என்று குற்றசாட்டுகிறார்.

மேலும், அவருடைய அனைத்து சொத்துகளும், குடும்பத்திற்கே வந்து சேர வேண்டும், காரணம், சசிகலா இதற்காக தான் தனது பெரியம்மாவை கூண்டுக்குள் இருக்கும் பறவையை போல் வைத்திருந்தார். இதை எனது பெரியம்மாவே என்னிடம் கூறினார் என்று சொல்கிறார்.

ம்ம்ம்ம்…யார் சொல்வதை நம்புவது என்று தெரியவில்லை, ஆனால் இது எங்கோ சென்று எதிலோ முடியப்போகிறது என்பது மட்டும் தெரிகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்