News
Loading...

ஜெ.,பதவியில் சசிகலா..! 29ம் தேதி பொதுச்செயலாளராக தேர்வு..! தொண்டர்கள் கடும் எதிர்ப்பு..!

ஜெ.,பதவியில் சசிகலா..! 29ம் தேதி பொதுச்செயலாளராக தேர்வு..! தொண்டர்கள் கடும் எதிர்ப்பு..!

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி சென்னை அப்போலோவில் காலமானார். அவரது உடல் அடுத்த நாளே அவசர அவசரமாக சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர்.,சமாதி அருகே புதைக்கப்பட்டது.

5ம் தேதி இரவே முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்று கொண்டார். ஜெ.,புதைக்கபட்ட மறுநாளே போயஸ் இல்லத்தில் ஜெ.,வகித்த பதவி கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை சசிகலாவிற்கு வழங்க வேண்டும் என மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 29ம் தேதி அதாவது ஜெ.,இறந்த 24வது நாள் அ.தி.மு.க.,பொதுக்குழு கூடுகிறது. அந்த கூட்டத்தில் ஏகமனதாக சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா ஜெ.,இடத்திற்கு வர அடிமட்ட தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...