News
Loading...

தஞ்சாவூரில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டிய அதிமுக பிரமுகர்

தஞ்சாவூரில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டிய அதிமுக பிரமுகர்

றைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தஞ்சாவூரில் அதிமுக பிரமுகர் கோயில் கட்டியுள்ளார்.

தஞ்சாவூர் மேலவீதியைச் சேர்ந்தவர் எம்.சாமிநாதன்(44). 18-வது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் கொறடாவுமான இவர், மேலவீதி கொங்கனேஸ்வரர் கோயில் அருகில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.2 லட்சம் செலவில் கோயில் கட்டியுள்ளார்.

இதுகுறித்து எம்.சாமிநாதன் கூறியது: என்னைப் போன்ற சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அவரது மறைவு என்னை பெரிதும் பாதித்தது. அவருக்காக மேலவீதியில் கடந்த 7-ம் தேதி கோயில் கட்டும் பணியை தொடங்கினேன். தற்போது கட்டுமான பணிகள் முடிவடைந்துவிட்டது.

இந்த கோயிலில் தற்போது ஜெயலலிதாவின் படமும், அதன் இருபுறமும் அண்ணா, எம்ஜிஆர் படங்களும் வைக்கப்பட உள்ளது. விரைவில் இரண்டடியில் ஜெயலலிதாவின் வெங்கல சிலை வைக்கப்படும். கோயிலில் 24 மணி நேரமும் தீபம் எரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பிறந்தநாள், நினைவு நாட்களில் நாள்முழுவதும் அன்னதானமும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும். இந்த கோயிலை மாவட்டச் செயலாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி ஓரிரு நாட்களில் திறந்து வைக்க உள்ளார். இந்த கோயிலில் தோஷம் கழிப்பதற்காக நாள் முழுவதும் பசுவும், கன்றும் கட்டி வைக்கப்படும். இதையடுத்து இந்த கோயில் புனிதமாகிவிடும், பின்னர் பிரார்த்தனை தலமாக விளங்கும் என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்