News
Loading...

ஜெயலலிதா தொகுதியில் போட்டியிடும் அண்ணன் மகள் தீபா.?

ஜெயலலிதா தொகுதியில் போட்டியிடும் அண்ணன் மகள் தீபா.?

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் அவரது அண்ணன் மகள் தீபாவை சுயேச்சையாக போட்டியிட வைக்க சில அதிமுக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த 5ம் தேதி ஜெயலலிதாவை சந்திப்பதற்காக அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா சென்றிருந்தார். அப்போது அவரை சந்திக்க அனுமதி அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த தீபா செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேட்டியளித்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் அஞ்சலி செலுத்துவதற்கு மட்டுமே தீபாவை அனுமதித்தனர். இதனால் உச்சகட்ட கொதிப்பில் தீபா இருக்கிறார் என்று அதிமுகவை சேர்ந்த சிலர் தெரிவிக்கின்றனர்.

தீபாவை முன் வைத்து சசிகலாவுக்கு எதிரான ஆட்டத்தையும் சிலர் தொடங்கியுள்ளனர். இதனால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...