News
Loading...

Jayalalitha to Jayalalithaa பெயர் மாற்றமே வெற்றிக்கு காரணமா..!

Jayalalitha to Jayalalithaa பெயர் மாற்றமே வெற்றிக்கு காரணமா..!

“நாம் வேறொன்றுக்கு மிகத் தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போது... சம்பந்தமே இல்லாமல் நமக்கு வேறொன்று நடக்கும். அதுதான் வாழ்க்கை.” இது  ‘மேரி  ஒர்த்’ காமிக் கதையை எழுதிய ஏலன் கூறியது.  ஜெயலலிதா உதறித் தள்ளிய பாஜ தலைமையில் மத்தியில் ஆட்சி, ஜெயலலிதாவுக்கு  ஆண்டின் முதல் மாதமே,  அதாவது ஜனவரி 12, 2000 அவருக்கு சந்தோஷம் தருவதாக இல்லை. இந்நிலையில் ஆஸ்தான ஜோதிடர்கள், அவருக்கு இப்போது நேரம் சரியில்லை. நட்சத்திரங்களின்  நகர்வு சரியில்லை என்று கூறி இருந்தார்கள். இதற்கு முன்பே கணித ஜோதிடத்தின்படி Jayalalitha என்ற தன் பெயரை Jayalalithaa என்று மாற்றி இருந்தார். பயம் பயப்பட வேண்டும்ஜெயலலிதா ஒருமுறை தொண்டர்கள் மத்தியில் பேசும்ேபாது, “நாம் பயம் கொள்வதற்கு ஒன்றும் இல்லை... பயம் தான் பயம் கொள்ளவேண்டும்... என்னை மக்கள்  மன்றத்தில் யாராலும் வீழ்த்த முடியாது என்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் கூறினார் ஜெயலலிதா. அதுவரை துவண்டிருந்த அதிமுகவினர் உற்சாகம் கொண்டனர்.  தேர்தலுக்குத் தயாராகினர்.  பிரச்னைகள் என் ஆளுமையை வடிவமைத்தது.

ஒரு முறை ஜெயலலிதா ஒரு நிருபருக்கு அளித்த பேட்டி: “காலத்துக்கு ஏற்றவாறு என்னை வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன். நான் முதிர்ச்சி அடைந்திருக்கிறேன்.  என் வாழ்க்கையில், பல இன்னல்களை சந்தித்து இருக்கிறேன்; அதனைக் கடந்து வந்திருக்கிறேன். யோசித்துப்பார்த்தால், அந்தப் பிரச்னைகள்தான் என் ஆளுமையை  வடிவமைத்து இருக்கிறது’’ என்று படீரென்று பதில் அளித்தார். மக்களின் தீர்ப்பே முக்கியம்ஒரு சட்டமன்ற தேர்தலின்போது, ஜெயலலிதா ஊர் ஊராக சென்றார். மக்களை சந்தித்தார்.  அவர் தன் கட்சியின் கொள்கைகள் குறித்துப் பேசவில்லை. தான் ஆட்சிக்கு  வந்தால் மக்களுக்கு என்ன செய்வோம் என்பது குறித்துப் பேசவில்லை... தமிழகத்தில், தற்போது நிலவும் பிரச்னைகள் குறித்தும் பேசவில்லை... தன்னைப் பற்றி  மட்டும்தான் பேசினார். முழுக்க முழுக்க தன்னை மட்டுமே பிரதானப்படுத்தினார்.  

தன் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் புனையப்பட்ட வழக்குகள்  என்றார். அரசியல் சூழ்ச்சியால் தன் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்றார். தனக்கு அநீதி இழைக்கப்படுகிறது; நியாயம் வேண்டும் என்றார்.  முத்தாய்ப்பாக அவர், “மற்ற தீர்ப்புகள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும். எனக்கு உங்கள் தீர்ப்புதான் முக்கியம். நீங்கள் சரியான தீர்ப்பை  வழங்குவீர்களா? நான் உங்களிடம் பிச்சை கேட்கிறேன். நீங்கள் சரியான தீர்ப்பை வழங்குவீர்களா.?” என்றார். கூட்டம் சில நொடிகள் நிசப்தம் ஆனது. பின்  கண்ணீருடன் கரகோஷம் எழுப்பியது. அந்த தேர்தலில் அதிமுக 132 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. இது என்னுடைய மறுபக்கம்  2006ம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலில்  மக்கள் நல அரசுதான் இது என்பதை நிரூபிக்க அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டார். தமிழகத்தில் தான்  அமல்படுத்திய கட்டாய மதமாற்ற தடைச்சட்டம், கோயில்களில் ஆடு, கோழி பலியிடத் தடைச்சட்டம் என மக்கள் விரும்பாத அனைத்துச் சட்டங்களையும் திரும்பப்  பெற்றார். கொஞ்சம் கொஞ்சமாக இழந்த செல்வாக்கை மீட்டுக் கொண்டிருந்தார். இதுகுறித்து கேள்விகேட்ட ஊடகங்களுக்கு அவர், “இதற்குமுன் எனது ஒரு  பக்கத்தைப் பார்த்தீர்கள். இப்போது இன்னொரு பக்கத்தைப் பார்க்கிறீர்கள். எதிர்காலத்தில் வேறுபட்ட பக்கங்களைப் பார்ப்பீர்கள்” என்றார்.  அவர் மழைநீர் சேகரிப்பு  திட்டத்தை அமல்படுத்தினார். இப்போது, அந்தத் திட்டம் பயன் தரத் தொடங்கி இருக்கிறது. இது அவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கித் தந்தது. மேலும் வீராணம்  கூட்டுக் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்தி, வீராணத்திலிருந்து தண்ணீரை சென்னைக்கு கொண்டு வந்து, சென்னைவாசிகளின் தாகம் தணித்தார். இது சென்னை  மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.

சந்தனக்கட்டை வீரப்பன் இனி இல்லை

அக்டோபர் 18, 2004ம் ஆண்டு வந்த ஒரு செய்தி, மொத்த இந்தியாவையும் அவரை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது.   செவ்வாய்கிழமை (அக்டோபர் 19, 2004),  “வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் தர்மபுரி பாப்பாரப்பட்டி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்” என்பதுதான் அந்தச் செய்தி. ஒரே நாளில் ஒட்டுமொத்த  இந்தியாவின் பேசு பொருளானது இந்தச் செய்தி. உலக ஊடகங்கள் எல்லாம் தர்மபுரியில் திரண்டன. 17,000 சதுர கிலோ மீட்டர் பரப்பை ஆட்சி செய்த வீரப்பன். சந்தன  மரங்களை வெட்டிக் கடத்திய வீரப்பன், யானைகளைக் கொன்று, அதன் தந்தத்தைக் கடத்திய வீரப்பன் இனி இல்லை. அவர் என் தலைமையிலான ஆட்சியின்போது  கொல்லப்பட்டார் என்ற ஜெயலலிதா, வீரப்பன் தேடுதல் வேட்டையில் இருந்த அனைத்து காவலர்களுக்கும் பதவி உயர்வு, வீட்டுமனை என எண்ணற்ற பரிசுகளை  வழங்கினார்.  
சங்கரராமன் ெகாலை வழக்கு
நவம்பர் 11, 2004 ஊரே உற்சாகமாக தீபாவளிக் கொண்டாடிக் கொண்டிருக்க, சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் சங்கர மடத்துக்குள் போலீஸ்  நுழைந்தது. இன்னொரு போலீஸ் டீம், ஆந்திராவுக்கு பறந்து  அங்கு முகாமிட்டிருந்த சங்கராச்சாரியாரை கைது செய்தது.  மீண்டும் இந்தியாவின்  பேசும்  பொருளானார் ஜெயலலிதா. சங்கரமடத்துடன் நல்ல நட்பில் இருந்த ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையை அனைவரும் அதிர்ச்சியுடனும், ஆச்சர்யத்துடனும்தான்  பார்த்தார்கள். ஒருபக்கம் தி.மு.க தலைவர் கருணாநிதியே பாராட்டி அறிக்கை கொடுக்க, இன்னொரு பக்கம் அத்வானி, சிங்கால், சங் பரிவாரங்கள் எல்லாம் இந்த  நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவை எதிர்த்து டெல்லியில் போராடிக் கொண்டிருந்தார்கள்.  வீதி வீதியாக சுற்றிய அமைச்சர்கள்இடைத்தேர்தலில் தோல்வியுற்றால், நிச்சயம் அடுத்த ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தல் தோல்வி நிச்சயக்கப்பட்ட ஒன்றாகிவிடும் என்பதால், அனைத்து  அமைச்சர்களையும் முடுக்கிவிட்டார்.  அனைத்து அமைச்சர்களும் காஞ்சிபுரம் வீதிகளில் சுற்றி வாக்குச் சேகரித்தனர். அ.தி.மு.க ஒற்றை கட்சியாக  தேர்தலை  எதிர்கொண்டு நிற்க, எதிர்த்து தி.மு.க தலைமையில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம் என பலமான  கூட்டணி அமைந்தது.   இந்தக் கூட்டணியை  எதிர்த்து ஜெயலலிதா வென்றார். அதுவும் காஞ்சிபுரத்தில் 17,648 வாக்கு வித்தியாசத்திலும், கும்மிடிப்பூண்டியில் 27,000 சொச்சம் வாக்கு வித்தியாசத்திலும் வென்றார். 

தனி ஆளாக சட்டமன்றத்துக்கு ெசன்ற ஜெயலலிதாஒரு முறை சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், “அதிமுக அரசு, மத்திய அரசை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மத்திய அரசு  தமிழகத்தில் கடல்நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டத்துக்கு 1000 கோடி ஒதுக்கி இருந்தது. ஆனால், தமிழக அரசு இந்தத் திட்டம் குறித்த அறிக்கையை அனுப்பவில்லை” என்று தன் உரையைத் தொடங்கினார்.  இந்த  உரைக்கு அவையில் இருந்த அதிமுக  சட்டமன்ற உறுப்பினர்களும் கடுமையான ஆட்சேபம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால்,  அவையில் இருந்த 59 அதிமுக உறுப்பினர்களும் இடைநீக்கம்  செய்யப்பட்டனர்.ஜெயலலிதா வெகுண்டெழுந்தார். அன்று மாலையே பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலலிதா, “இது அநீதி. நான் சட்டமன்றம் செல்லப்போகிறேன்” என்று  அறிவித்தார். அவையில் இருந்த அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில்... ஜெயலலிதா மட்டும் தனியாக மே 27, 2006 சனிக்கிழமை  சட்டமன்றம் சென்றார். 

சபாநாயகர் ஆவுடையப்பனிடம் 95 நிமிடங்கள் பேச அனுமதிகேட்டார் ஜெயலலிதா.  புள்ளிவிவர தகவல்களுடன் உரையைத் தொடங்கினார்  ஜெயலலிதா.அமைச்சர்கள் குறுக்கிட்டனர். ஜெயலலிதா அதைப் பொருட்படுத்தாமல் உரையைத் தொடர்ந்தார். அந்த 30 நிமிடங்களும் குளிரூட்டப்பட்ட சட்டமன்ற அறையின்  குளிர்ச்சியைத் தாண்டி விவாதம் உஷ்ணமாகச் சென்றது. அவை நேரம் முடிந்து வெளியே வந்த ஜெயலலிதா, பத்திரிகையாளர்களிடம், “எங்கள் கட்சியைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு  இருக்கிறார்கள். நான் மட்டும்தான் என் கட்சி சார்பாக இருக்கிறேன். அதனால், எனக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் நான் கேட்ட  நேரத்தை வழங்கவில்லை.  இது ஜனநாயகப் படுகொலை”  என்றார்.  

அவருடைய மிகப் பெரிய ஆளுமை மாற்றத்திற்கான காரணம் நீயூமராலஜீ முறையில் பெயரில் மாற்றம் செய்ததே...

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.