News
Loading...

ஜெயலலிதா கால்கள் எங்கே.? சிபிஐ விசாரணை தேவை.. ராமதாஸ் அறிக்கை..!

ஜெயலலிதா கால்கள் எங்கே.? சிபிஐ விசாரணை தேவை.. ராமதாஸ் அறிக்கை..!

மிழக முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தனிப்பட்ட முறையில் எனக்கே சந்தேகமாக உள்ளது என்றார். நீதிபதி வைத்தியநாதன் எழுப்பியுள்ள கேள்விகள் முக்கியமானவை ஆகும்.

சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு காரணமாக மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் டிசம்பர் 5ம் தேதி மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டது வரை ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய தகவல்கள் வெளிப்படையானதாக இல்லை.

மேலும், அவரது இரண்டு கால்கள் மற்றும் பற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. சாதாரண குடிமகனுக்கு கூட உயிருக்கு ஆபத்தான நிலையில் அறுவை சிகிச்சை செய்யும்போது ரத்த உறவுகளிடம் அனுமதி பெறவேண்டும் என்று இந்திய சட்டம் சொல்கிறது.

அப்படி இருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் யாரிடம் அனுமதி பெற்றது. இதற்கு தமிழக அரசுடன் அனுமதி பெற்றதா? என்பன குறித்து இன்றுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.

தமிழக முதலமைச்சர் என்ற முறையில் அவரது மரணம் பற்றி உரிய விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...