News
Loading...

ஜெயலலிதா மர்ம மரணம்.! நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.? சுப.உதயகுமாரன் கோரிக்கை.!

ஜெயலலிதா மர்ம மரணம்..! நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.? சுப.உதயகுமாரன் கோரிக்கை..!

றைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் உள்ளதாகவும் அதனை நீதிமன்றம் விசாரித்து உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சு.ப.உதயகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி உதயகுமார் கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது என்று பொதுமக்கள் நினைக்கின்றனர். அந்த மர்மத்தை நீதிமன்றம் தான் உரிய விசாரணை நடத்தி, நாட்டு மக்களுக்கு உண்மைகளை தெரிவிக்க வேண்டும்.

ஜெயலலிதா சாதாரண காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதலில் தெரிவித்தனர். பிறகு நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்றனர். பின்னர் 75 நாட்கள் கழித்து மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது என்று அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க சென்றால் 2வது தளம் வரைக்கும் செல்ல முடிகிறது. ஆனால், அவரை யாரும் பார்க்க முடியாது என்று கூறி அனுப்பியுள்ளனர்.

கடைசியாக டிசம்பர் 5ம் தேதி மாலை ஜெயலலிதா இறந்ததாக தகவல் தெரிவித்தனர். அந்த தகவலை மருத்துவமனை மறுப்பு தெரிவித்தது. பின்னர் இரவு 11.30 மணியளவில் இறந்துவிட்டதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களை பார்க்கும்போது அவர் உண்மையிலே மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா அல்லது திட்டமிட்ட செய்யப்பட்ட மரண நிகழ்வா என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...