News
Loading...

ஜெயலலிதா சொத்துக்கள் என்ன ஆகும்?

ஜெயலலிதா சொத்துக்கள் என்ன ஆகும்?

ஜெயலலிதா மரணத்தில் பல கேள்விகளுக்கு பதில் இல்லை. ஆனால், உயிருள்ள கேள்வியாக இருப்பது, ஜெயலலிதாவின் சொத்துக்கள் அடுத்து என்ன ஆகும் என்பதுதான். அவருடைய சொத்துக்களுக்கு வாரிசுகள் யார்? ஜெயலலிதா சொத்துக்கள் யாருக்குப் போகும்? சட்டம் என்ன சொல்கிறது? விடை தெரியாத கேள்விகளுக்கு விடை அளிக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்.ரமேஷ்.

வளர்ப்பு மகன் சுதாகரன் வாரிசாக முடியுமா?

‘‘ஒரு பெண் (ஆணுக்கு இது பொருந்தாது) இறந்துவிட்டால், அவருடைய சொத்துக்களுக்கு அவருடைய பிள்ளைகள் மற்றும் கணவர் வாரிசு ஆவார்கள். அவர்கள் இல்லாதபோது, பெண்ணின் பெற்றோருக்கு அந்தச் சொத்துக்கள் போகும். ஜெயலலிதாவைப் பொருத்தவரை, அவருக்கு திருமணம் ஆகவில்லை; அவரது பெற்றோரும் உயிருடன் இல்லை.குழந்தைகள் இல்லை. ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் என்று யாரும் கிடையாது. ஆனால், 1995-ம் ஆண்டு சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் வி.என்.சுதாகரனை, தனது வளர்ப்பு மகன் என ஜெயலலிதா அறிவித்தார். ‘வளர்ப்பு மகன்’ என அறிவித்தாரே தவிர, சுதாகரனை தத்தெடுக்கவில்லை. ஏனென்றால், இந்து தத்தெடுப்புச் சட்டப்படி, ஒரு குழந்தையை ஒரு பெண் தத்தெடுப்பதற்கு பல நிபந்தனைகள் உள்ளன. இந்தச் சட்டப்படி, திருமணம் ஆகாத அல்லது விவாகரத்தான பெண்ணும் குழந்தையைத் தத்தெடுக்கலாம். குழந்தையை தத்துக் கொடுப்பவர், தத்தெடுப்பவர் இருவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். ஆண் குழந்தையைத் தத்தெடுத்தால் அந்தப் பெண்ணுக்கும், அந்தக் குழந்தைக்குமான வயது வித்தியாசம் குறைந்தது 21 வயது இருக்க வேண்டும்.

ஜெயலலிதா சொத்துக்கள் என்ன ஆகும்?

தத்தெடுக்கப்படும் குழந்தைக்கு 15 வயது நிரம்பி இருக்கக்கூடாது. தத்தெடுப்பு என்பது இந்துமத முறைப்படியான சடங்குகளைப் பின்பற்றியோ அல்லது பதிவு செய்த தத்தெடுப்பு ஆவணம் மூலமாகவோ நடக்கலாம். இந்தச் சட்ட அடிப்படையில் பார்த்தால், வி.என்.சுதாகரன் ஜெயலலிதாவின் தத்துப் பிள்ளையாக ஆக முடியாது. இதனால்தான், சுதாகரனை ‘தத்துப்பிள்ளை’ என சொல்லாமல் ‘வளர்ப்பு மகன்’ என்று அறிவித்தார் ஜெயலலிதா. அதனால், சுதாகரன் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசு கிடையாது. அதனால் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமைகோரவும் முடியாது.

ஜெயலலிதா சொத்துக்கள் என்ன ஆகும்?

ஜெயலலிதாவின் சொத்துக்கள் என்ன ஆகும்?

இந்து வாரிசு உரிமை (அ) இறங்குரிமைச் சட்டம், பிரிவு 15, 16-ன்படி, ஒரு பெண்ணின் சொத்துக்கள் முதலில் மகன், மகள் மற்றும் கணவருக்குச் சமமாகச் சென்று சேரும். மகன் அல்லது மகள் அல்லது கணவர் என்று யாருமே இல்லாதபோது, அந்தப் பெண்ணின் கணவருடைய வாரிசுகளுக்கு சென்று சேரும். அதாவது, கணவருடைய தாய், கணவருடைய வேறு தாரத்தின் பிள்ளைகளுக்குச் சென்று சேரும். ஒரு பெண் திருமணம் ஆகாமல் மரணம் அடையும்போது, அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்குச் சொத்துக்கள் போகும். பெற்றோர் இறந்துவிட்டால், பெற்றோரில் தந்தையின் வாரிசுகளுக்கு, அந்தப் பெண்ணின் சொத்து சென்று சேரும். ஒருவேளை அந்தப் பெண்ணின் தந்தைக்கும் வாரிசுகள் இல்லையென்றால், தாயின் வாரிசுகளுக்கு சென்று சேரும். இந்த சட்டங்களின்படி பார்த்தால், ஜெயலலிதாவின் சொத்துக்கள், அவருடைய தந்தை ஜெயராமனின் வாரிசான, ஜெயக்குமாரின் வாரிசுகளுக்குப் போகும். அதாவது, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமைகோர முடியும். இந்த இறங்குரிமை என்பது, ஜெயலலலிதா தன்னுடைய சொத்துக்கள் குறித்து, உயிலோ அல்லது வேறு ஆவணங்களோ எதுவும் எழுதி வைக்காமல் இருக்கும் நிலையில்தான் நடக்கும். ஜெயலலிதா தன்னுடைய சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கலாம். அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு. சட்டம் அதற்கு வழி செய்கிறது. அப்படி, ஜெயலலிதா வேறு யாருக்கும் தன்னுடைய சொத்துக்களை உயில் எழுதி வைக்காத நிலையில்தான், அதற்கு அவருடைய அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் உரிமைகோர முடியும். ஒருவேளை, ஜெயலலிதா உயில் எழுதிவைத்திருந்தால், அந்த உயிலில் ஜெயலலிதா யாரைக் குறிப்பிட்டுள்ளாரோ அவருக்குத்தான் அந்தச் சொத்துக்கள் போய்ச் சேரும்.

ஜெயலலிதா சொத்துக்கள் என்ன ஆகும்?

உயில் எழுதியிருந்தால் என்ன நடக்கும்? 

ஜெயலலிதா தன்னுடைய சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளாரா, இல்லையா? என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. உயிலைப் பொருத்தவரையில் அதைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. பதிவு செய்யாத உயிலாக இருந்தாலும் அது செல்லும். அந்த உயில் குறித்து, சம்பந்தப்பட்டவர்கள் வெளியில் சொல்லாதவரை யாருக்கும்  தெரிய வாய்ப்பில்லை. ஆனால், அந்தச் சொத்துக்களை விற்க முயன்றால் அது தெரியவரும். சென்னையில் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக உள்ள சொத்துக்கள் குறித்து உயில் எழுதப்பட்டிருந்தால் அந்த உயில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘புரபேட்’ செய்யப்பட வேண்டும். அப்போதுதான், அந்த உயில் செல்லும். உதாரணத்துக்கு, ஜெயலலிதாவுக்குச் சொந்தமான, போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் வீடு குறித்து அவர் உயில் எழுதி இருந்தால், அது சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘புரபேட்’ செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அந்த உயில் குறித்து நமக்குத் தெரியவரும். அதன்மூலம்தான், ஜெயலலிதா அந்த வீட்டை யாருக்கு எழுதி வைத்துள்ளார் என்பதும் தெரியும். ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபக், தீபா தவிர வேறு மூன்றாம் நபருக்கு (சசிகலா உள்பட) தனது சொத்துக்களை ஜெயலலிதா உயில் எழுதி வைத்திருந்தால், தீபக்கும் தீபாவும் அந்த உயிலின் ‘செல்லும் தன்மை’ குறித்தும், ‘புரபேட்’ வழங்கக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காட முடியும். தமிழகத்தில் சென்னை தவிர்த்து, வேறு ஊர்களில் ஜெயலலிதாவுக்கு சொத்து இருந்தால், அது சம்பந்தமாக அவர் உயில் எழுதி இருந்தால், அதை ‘புரபேட்’ செய்யத் தேவை இல்லை. ஆனால், அந்த உயில் சென்னையில் எழுதப்பட்டு இருக்குமானால், மேலே சொன்ன ‘புரபேட்’ நடவடிக்கைகள் பொருந்தும்.

ஜெயலலிதா சொத்துக்கள் என்ன ஆகும்?

சிக்கலை ஏற்படுத்துமா சொத்துக் குவிப்பு வழக்கு?

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதையடுத்து, ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக சுட்டிக்காட்டப்பட்ட நகைகள் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்தத் தொகையை முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள், நகைகளை ஏலம்விட்டு எடுத்துக்கொள்ளலாம் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெயரில் வாங்கப்பட்ட அசையா சொத்துக்களை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. ஆனால், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. கர்நாடக உயர் நீதிமன்றம் செய்த ரத்தை எதிர்த்து, தற்போது, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு நடந்து, அதில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அதில் வெளிவரப்போகும் தீர்ப்பில், ஜெயலலிதா குற்றவாளி இல்லை என அறிவிக்கப்பட்டால், முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்த பணம் மற்றும் நகைகள் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வமான வாரிசுகளைச் சென்றடையும். ஒருவேளை, ஜெயலலிதா குற்றவாளி என்றும், அவருக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி ரூபாய் அபராதமும் உறுதி செய்யப்பட்டால், அந்த அபராதத்தை ஜெயலலிதாவின் சொத்துக்களில் இருந்துதான் வசூலிக்க வேண்டும். 

சொத்துக் குவிப்பு வழக்கில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்கள் என்னென்ன? ஜெயலலிதா வீட்டில் வசிக்கும் சசிகலா, இளவரசி ஆகியோர் தொடர்புடைய சொத்துக்கள் என்ன ஆகும்? அது அடுத்த இதழில்...

ஜெயலலிதா சொத்துக்கள் என்ன ஆகும்?

ஜெயலலிதா சொத்துக்கள் என்ன ஆகும்?

ஜெயலலிதா சொத்துக்கள் என்ன ஆகும்?

ஜெயலலிதா சொத்துக்கள் என்ன ஆகும்?

ஜெயலலிதா சொத்துக்கள் என்ன ஆகும்?

ஜெயலலிதாவின் சொத்துக்கள் என்ன? கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்துக் கணக்குகளை வைத்து அலசுவோம். 

கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நிலவரப்படி அவரிடம் இருந்த கையிருப்பு ரொக்கம் 41 ஆயிரம். வங்கிக் கணக்குகள், நிதி நிறுவன இருப்புகளை எடுத்துக்கொண்டால் 25 வங்கி கணக்குகள் ஜெயலலிதா பெயரில் இருக்கின்றன. சென்னை, செகந்திராபாத், நீலகிரி ஆகிய இடங்களில் வங்கிக் கணக்குகள் உள்ளன. சில வங்கிகளில் ஐந்து கணக்குகள் வரை உள்ளன. 9 கணக்குகள் சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாக முடக்கப்பட்டிருக்கின்றன. 25 கணக்குகளில் மொத்தமாக 10.63 கோடி ரூபாய் இருக்கிறது. 

 பங்குதாரராக கம்பெனிகளில் செய்யப்பட்ட முதலீடுகளை எடுத்துக்கொண்டால் ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைஸஸ், கொடநாடு எஸ்டேட், ராயல்வேலி ஃபுளோரிடெக் எக்ஸ்போர்ட், கிரீன் டீ எஸ்டேட் ஆகிய 5 கம்பெனிகளில் மொத்தம் 27.44 கோடி ரூபாய் இருக்கிறது. 21,280.300 கிராம் தங்க நகையும், 3.12 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,250 கிலோ வெள்ளியும் ஜெயலலிதா வைத்திருந்தார். 

வாகனங்களை எடுத்துக்கொண்டால் மொத்தம் 9 வாகனங்கள் அவரிடம் இருப்பதாக சொல்லியிருக்கிறார். இதன் மொத்த மதிப்பு 42.25 லட்சம் ரூபாய். இது தேர்தல் கமிஷனில் சொல்லப்பட்ட கணக்கு. ஆனால், TN 09 BE 5969 என்ற பதிவு எண் கொண்ட Toyota Land Cruiser LC 200 மாடல் காரும் இதேப் போல TN 09 BE 6167  என்ற பதிவு எண் கொண்ட இன்னொரு காரும் ஜெயலலிதா பயன்படுத்தி வந்தார். அந்த கார்களை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை. இந்த கார் ஒன்றின் விலை ஒரு கோடி ரூபாய்.

அசையா சொத்துக்களில் ஆந்திரா ஜிடிமேட்லாவில் 14.44 கோடி ரூபாய் மதிப்புள்ள 14.50 ஏக்கர் விவசாய நிலமும், செய்யூரில் 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3.43 ஏக்கர் விவசாய நிலமும், ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில், 5.03 கோடி ரூபாய் மதிப்புள்ள 651.18 ச.மீ வீடும், சென்னை மந்தைவெளியில் 43.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,206 ச.அ வணிக கட்டடமும் சென்னை பார்சன் மேனரில் 4.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 790 ச.அடி வணிக கட்டடமும் ஜெயலலிதா பெயரில் உள்ளது. இதுதவிர போயஸ் கார்டனில் இரண்டு இடங்கள் ஜெயலலிதா பெயரில் இருக்கிறது. 7.83 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.5 கிரவுண்ட் வீடும் 43.96 கோடி மதிப்பு கொண்ட 10 கிரவுண்ட் வீடும் போயஸ் கார்டனில் உள்ளது. இந்த அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு 72.09 கோடி ரூபாய்.

அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு மட்டும் 113 கோடி ரூபாய். ஒட்டுமொத்தமாக இந்த கணக்கு எல்லாமே தேர்தல் கமிஷனில் சொல்லப்பட்ட கணக்கு. இதன் உண்மையான மதிப்பு பல மடங்கு அதிகம். ஜெயலலிதா பல கம்பெனிகளில் பங்குதாரராக இருக்கிறார். அது தொடர்பான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா என அந்த கணக்குகள் தனி. சொத்துக் குவிப்பு வழக்கில் இதுபற்றி விலாவரியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதையெல்லாம் சேர்த்தால் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எங்கேயோ போகும்.

ஜெயலலிதா இறந்தபிறகு அவரின் போயஸ் கார்டன் வீடு இப்போது யார் பெயரில் இருக்கிறது என வில்லங்கம் பார்த்தோம். அது இன்று வரையில் வேறு யார் பெயருக்கும் மாறவில்லை! 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...