News
Loading...

ஜெ., மறைவுக்கான மர்ம முடிச்சுகள் அவிழுமா?! கொந்தளித்துக்கிடக்கும் தொண்டர்கள்!!

ஜெ., மறைவுக்கான மர்ம முடிச்சுகள் அவிழுமா..?! கொந்தளித்துக்கிடக்கும் தொண்டர்கள்..!!

மிழகத்தில் அ.தி.மு.கவின் நிரந்தர பொதுச்செயலாளராக இருந்ததுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார். பன்முகத்திறன் கொண்ட அவரின் ஆளுமைத்திறன் யாராலும் அளவிட்டு கூறிவிட முடியாத அளவில் இருந்தது. தனக்கென ஒரு வழியை தேர்வு செய்து கொண்டு அதில் நிதான பயணம் மேற்கொண்டவர் அவர்.

அப்படி செயலாக்கம் மிகுந்த அவரின் மரணம் பல சந்தேகங்களுக்கு இடமளித்துள்ளது. அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலம் தொட்டு அவர் பற்றிய படங்கள் வந்திருந்தால், இந்த சந்தேகங்களுக்கு இடமில்லாமல் போயிருக்கும். ஆனால், அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும் இந்த சந்தேக வலையில் வந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் படங்களை அல்லது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லாமல் வெறும் அறிக்கைகளை மட்டுமே அப்போலோ நிர்வாகமும்,அ.தி.மு.கவின் செய்தி தொடர்பாளர்களும் செய்தியாளர்கள் முன்னிலையில் கூறி வந்தனர்.
அதிலும் நலமாகிவிட்டார். தற்போது வேண்டியதை கேட்டு சாப்பிடுகிறார். பூரண குணம் அடைந்துவிட்டார் என்றெல்லாம் கூறிய அவர்களும் ஜெயலலிதாவை பார்க்கவே இல்லை, அல்லது பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

மூத்த அமைச்சர்கள் அல்லது முக்கிய தலைவர்கள் கூட பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஏதோ கற்காலத்தில் வாழ்வதை போல எதையும் காட்டாமல் இருந்தது எல்லார் மத்தியிலும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்தேகங்களை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நினைத்தால் மட்டுமே தீர்க்க முடியும். அவர்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி பதிவுகளை வெளியிட்டாலே பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்துவிடும்.

ஏன் அதை செய்ய மறுக்கிறார்கள்? மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லாமல் இருந்தால், மேலும் சந்தேகங்களை அதிகப்படுத்துவதாகவே இருக்கும். மர்மங்கள் விலகுமா..-? தொண்டர்களும்,மக்களும் கொதித்துக்கிடக்கின்றனர்..!!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...