News
Loading...

ஜெயலலிதாவின் நிறைவேறாத சின்னச்சின்ன(பெரிய) ஆசைகள்..!!

ஜெயலலிதாவின் நிறைவேறாத சின்னச்சின்ன(பெரிய) ஆசைகள்..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பன்முகத்திறன் கொண்டவர். அதேபோல அவருக்கு சில நிறைவேறாத ஆசைகளும் உண்டு.

வழக்கறிஞர் ஆசை

மெட்ரிக் கல்வி முடித்தவுடன் அவர் வழக்கறிஞருக்கு படிக்க விரும்பினார். ஆனால் குடும்ப வற்புறுத்தலால் சினிமாவில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பரத நாட்டிய கலைஞர்

அவர் நல்ல பரத நாட்டியக்கலைஞர். சிறந்த பரதநாட்டியக் கலைஞராக உருவெடுக்க வேண்டும் என்று சிறு வயது முதல் ஆர்வம் இருந்தது. ஆனால், பரதம் கற்றுக்கொண்டார்.அரங்கேற்றம் நடந்தது. சிறந்த பரதக்கலைஞராக தொடர முடியவில்லை. அதற்கு அவரது குடும்ப சூழலும் ஒரு காரணம் என்று அவரே கூறியிருந்தார்.

ஆங்கில எழுத்தாளர்

அதேபோல அவர் சிறந்த எழுத்தாளராகவும் இருந்தார். தமிழில் பல சிறுகதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ளார். அவருக்கு சிறந்த ஆங்கில எழுத்தாளராக வேண்டும் என்பது ஆசை. அவர் நடிகையாகி பிசியான பின்னர் அந்த கனவும் நிறைவேறாமல் போய்விட்டது.

பிரதமர் பதவி

தனது அரசியல் பயணத்தில் அவர் இறுதியாக ஆசைப்பட்டது பிரதமர் ஆக வேண்டும் என்பது. அவர்து திட்டமிட்ட செயலாற்றல் அவர் உயிருடன் இருந்திருந்தால் கால ஓட்டத்தில் அதுவும் நடந்திருக்கும்.
ஆனால், அவர் மனதோடு இந்த ஆசைகளும் மடிந்து போய்விட்டன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்