News
Loading...

ஜெயலலிதாவின் பென் ட்ரைவ் எங்கே?

ஜெயலலிதாவின் பென் ட்ரைவ் எங்கே?

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ஒரு ‘பென் டிரைவ்வை’ பெர்ஸனலாக வைத்து இருந்திருக்கிறார். அதில் தனக்குப் பிடித்த பாடல்களைப் பதிவுசெய்து கேட்பது வழக்கமாம். அது போயஸ் கார்டனில் வேலைச் செய்த பணிப்பெண் ஒருவரின் வசம் இருந்து வந்தது. ஜெயலலிதா கேட்கும்போது பணிப்பெண் பென் டிரைவ்வை கொடுப்பாராம். அப்போலோ சென்ற சில நாட்களில் நினைவு திரும்பிய ஜெயலலிதா முதலில் கேட்டது அந்த பென் டிரைவ்வை தானாம். அப்போது அதை யாரும் சீரியஸாக எடுக்கவில்லையாம். ஜெயலலிதா இறந்த பிறகு, `சொத்துக்கள் யாருக்கு’ என கேள்வி எழுந்தபோதுதான் பென் டிரைவ் மேட்டர் கார்டன் புள்ளிகளுக்கு நினைவுக்கு வந்துள்ளது. `யார் பெயரில் ஜெயலலிதா சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்’ என்ற பிரச்னை எழும்ப, அதன்பின் உஷாரான முக்கியப் புள்ளிகள் பென் டிரைவ்வை தேடத் தொடங்கி உள்ளனர். அதற்குள் பென் டிரைவ்வை வைத்திருந்த பணிப் பெண் கார்டனை விட்டுப் போய்விட்டாராம். அப்செட்டான கார்டன் புள்ளி ஒருவர், ரகசியமாக உளவுப் பிரிவு போலீஸாரிடம் பணிப்பெண்ணையும் பென் டிரைவையும் கண்டுப்பிடிக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். அந்தப் பணிப் பெண் குமரி மாவட்டத்தில் இருப்பதாக உளவு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைக்க, குமரி பகுதிகளில் திடீர் சர்வே என்கிற பெயரில் பணிப் பெண்ணைத் தேடிவருகிறார்களாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்