News
Loading...

ஜியோ போட்டியை சமாளித்து கஸ்டமர்களை தக்க வைக்க ஏர்டெல் இலவச மழை..!

ஜியோ போட்டியை சமாளித்து கஸ்டமர்களை தக்க வைக்க ஏர்டெல் இலவச மழை..!

ரிலையன்ஸ் ஜியோ இலவச சிம் கார்டு, இலவச டேட்டா, இலவச வாய்ஸ் கால் என அனைத்துமே மார்ச் 31 வரை இலவசம்.

மேலும் வாழ்நாள் முழுவதும் இலவச வாய்ஸ்கால் என்ற அறிவிப்பை தொடர்ந்து பல கோடி வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தியுள்ளது.

இந்த போட்டியை சமாளிக்க அதிக வாடிக்கையாளர்களை வைத்துள்ள ஏர்டெல் பல்வேறு சிறப்பு சலுவைகளை அறிவித்துள்ளது.

ஏர்டெல் அறிவித்திருக்கும் இரண்டு புதிய திட்டங்கள் பிரீபெயிட் பயனர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் விலை ரூ.145/- மற்றும் ரூ.345/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.145/- திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்யும் பயனர்கள்,

தங்களது 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு 300எம்பி அளவு 4ஜி டேட்டா மற்றும் அனைத்து ஏர்டெல் நம்பர்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை இலவசமாக மேற்கொள்ள முடியும்.

இன்டர்நெட் இணைப்பு வசதி கொண்ட பீச்சர்போன்களுக்கு 50எம்பி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

மற்றொரு புதிய திட்டத்தில் ரூ.345/- செலுத்தி ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 1ஜிபி அளவு 4ஜி டேட்டா மற்றும் இந்தியா முழுக்க அனைத்து நம்பர்களுக்கும்.

இலவச உள்ளூர் மற்றும் வெளியூர் எண்களுக்கு இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இத்துடன் பீச்சர்போன் பயனர்களுக்கு 50எம்பி அளவு டேட்டா வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கான வேலிடிட்டி 28 நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் திட்டங்களின் விலை டில்லி வட்டாரத்திற்கு மட்டும் பொருந்தும் என்றும் மற்ற வட்டாரங்களின் விலையில் மாற்றங்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...