News
Loading...

கரூர்: காவிரி ஆற்றுப்படுகையில் மணல் அள்ளிய லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்

கரூர்: காவிரி ஆற்றுப்படுகையில் மணல் அள்ளிய லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்

ரூர் அருகே, காவிரி ஆற்றுப்படுகையில் தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதாக குற்றம்சாட்டி, பொதுமக்கள் மணல் லாரிகளை சிறைபிடித்தனர். கடம்பன்குறிச்சி அருகே, காவிரி ஆற்றுப்படுகையில் அரசுக்கு சொந்தமான மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இந்த பகுதியில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும், இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், அந்த மணல் குவாரிக்கு மணல் அள்ள வந்த லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

மக்கள் சமூக விரோதிகளுக்கு எதிராக போராட வேண்டிய நேரமிது. ஏனெனில் ஆளும்கட்சியினரின் பினாமி தான் இந்த மணல் கொள்ளையர்கள் என்று சேகர்ரெட்டியின் கைது மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் வறட்சியால் பல விவசாயிகள் தற்கொலை செய்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. அது பற்றி முதல்வர் எந்த அறிக்கையும், எந்த நிவாரனமும் அளிக்கவில்லை. டெல்லியில் மோடியை சந்தித்த போதுகூட விவசாயிகளுக்கு எதுவும் கேட்கமல் ஊழல் குற்றவாழிக்கு பாரத ரத்தன விருது கேட்டார்கள். மணற் கொள்ளையால் நீர் ஆதாரம் பாதிக்கபடுகிறது. இதுவே விவசாயிகளின் முதன்மை பிரச்சனை. அதற்காக போராட வேண்டியது அவசியம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்