News
Loading...

அம்மா கோடநாடு வந்தால் திருவிழா தான்! விருந்து கொடுப்பார், தொழிலாளிகளுடன் குரூப் போட்டோ எடுத்துக்குவார்!

அம்மா கோடநாடு வந்தால் திருவிழா தான்! விருந்து கொடுப்பார்,தொழிலாளிகளுடன் குரூப் போட்டோ எடுத்துக்குவார்!

ம்மா கோடநாடு வந்தால் திருவிழா தான். விருந்து கொடுப்பார்,தொழிலாளிகளுடன் குரூப் போட்டோ எடுத்துக்குவார் என்று அங்கு பணியாற்றும் தொழிலாளிகள் துக்கத்தோடு சொல்கிறார்கள்.

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு பெரிய எஸ்டேட் இருக்கிறது.
பல முறை அவர் அங்கு ஓய்வுக்காக செல்வார். அங்கேயே அலுவல் வேலைகளையும் கவனிப்பார். அதனால் அந்த எஸ்டேட்டை கோடநாடு ‘கேம்ப் ஆபீஸ்’ என்றே அழைப்பர்.

தற்போது ஜெயலலிதாவின் மறைவின் எதிரொலியாக கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் அடுத்த முதலாளி யார் என்று கண்ணிரோடு காத்திருக்கிறார்கள்.

அந்த எஸ்டேட்டில் கோடநாடு, கெரடாமட்டம், சுண்டட்டி, ஈளாடா, கஸ்தூரிபா நகர், ஓம் நகர், எஸ்.கைக்காட்டி ஆகிய கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிக்காகச் சென்று வருகின்றனர்.

மறைவு சம்பவத்துக்கு பின்னர் கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரியும் பல தொழிலாளிகள் அம்மா வந்த பின்னர்தான் எங்களுக்கு வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பு கிடைத்தது அம்மா எஸ்டேட் வாங்கியதற்கு அப்புறம்தான் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள எல்லோருக்கும் வேலை கிடைத்தது. 2,000 பேர் வேலை செய்கிறோம். அம்மா கோடநாடு வந்தால் திருவிழா கோலமாகி விடும்”.

இங்குள்ள தொழிலாளிகளில் சிலர் கர்நாடகாவில் இருந்து வந்தவர்கள், அவர்களிடம் கன்னடத்தில் பேசுவார். நலம் விசாரிப்பார். எங்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் செய்து கொடுத்திருக்கிறார். அவங்க இல்லாததை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடிய வில்லை”.

அவர் முதல்வராக இருந்தாலும், எங்களுக்கு அவங்க தங்கமான முதலாளி. எங்களுடைய எல்லா கோரிக்கை களையும் நிறைவேற்றுவார். இங்கு வந்தால், பேட்டரி காரில் எஸ்டேட்டை சுற்றிப் பார்ப்பார். எல்லோரையும் சரிசமமாக கருதுவார். வீட்டை, குழந்தைகளை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை சொல்லுவார்.

எல்லா தொழிலாளர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்தாங்க. அந்த போட்டோவை பிரேம் போட்டு எல்லோருக்கும் கொடுத்தாங்க. கெரடாமட்ட கிராமத்துல உள்ள எல்லா வீடுகளிலும் அந்த குரூப் போட்டோ இருக்கும். அவர் கோடநாடு வந்தா நாங்கதான் முதலில் வரவேற்போம். அவர் இங்கிருந்து கிளம்புவதற்கு முன், எல்லா தொழிலாளர்களுக்கும் விருந்து கொடுப்பார்.

ஒருமுறை படுகர் இனமக்களாகிய நாங்கள் அவர் முன் எங்க பாரம்பரிய நடனம் ஆடினோம். அதைபார்த்து ரசித்த அம்மா எழுந்து எங்களோடு நடனம் ஆடி அசத்தினார்.

அம்மா முகத்தை கடைசியா பார்க்கமுடியலையே, திரும்ப அந்த மகராசியை எப்ப பார்க்கப்போறோம் என்று முதலாளி ஜெ….வின் மறைவுக்காக ரொம்பவே வருந்துகிறார்கள் கோடநாடு எஸ்டேட் ஊழியர்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...