இங்கிலாந்து அணிக்கு எதிராக மும்பையில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி இரட்டை சதம் அடித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 451 ரன்கள் எடுத்து 51 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இந்நிலையில் நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லியும் மறுமுனையில் ஜெயந்த் யாதவும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தி கொண்டிருந்த நிலையில் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி 303 பந்துகளில் 200 ரன்கள் கடந்து டெஸ்ட் போட்டிகளில் தனது மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
— BCCI (@BCCI) December 11, 2016
இதையடுத்து இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 562 ரன்கள் எடுத்து 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.