News
Loading...

2000 ரூபாய் நோட்டால் உடை அணிந்த பாலிவுட் நடிகை..!

2000 ரூபாய் நோட்டால் உடை அணிந்த பாலிவுட் நடிகை..!

2000 ரூபாய் நோட்டுடன் செல்பி எடுத்து மகிழும் இளைஞர்கள் மத்தியில் ஷாருக்கானின் தில்வாலே படத்தில் நடித்த பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோன் 2000 ரூபாய் நோட்டை போர்த்தியபடி உடையணிந்துள்ள புகைப்படங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளிவந்துள்ளது.

கறுப்பு பண வேட்டையை தொடர மோடியின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பு நாட்டையே உலுக்கியது எனலாம். இதையடுத்து, ஒரு 2000 ரூபாய் நோட்டை பெற நாள் முழுவதும் ஏடிஎம் வாசலில் காத்து கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோன் பல 2000 ரூபாய் நோட்டுகளால் ஆன உடை அணிந்திருக்கும் புகைப்படம் டுவிட்டர் பக்கத்தில் வெளிவந்துள்ளது. எங்கு வருமானவரித்துறை அவரை நோக்கி விரைந்து விடுமோ என்ற அச்சத்தில் க்ரிட்டி ‘நான் ரூபாய் நோட்டுகளில் உடை அணியவில்லை. மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம்’ என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...